பக்கம்:ராகுல் சாங்கிருத்யாயன்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

链器 ராகுல் சாங்கிருத்யாயன்

இப் புத்தகங்கள் தவிர, இமாலயம்பற்றிய புத்தக வரிசைகள் வேறு இருக்கின்றன. டார்ஜிலிங், குமாவான், கார்வால், ஜான் எார், நேப்பாளம், இமாசலப் பிரதேசம்பற்றி எழுதப்பட்ட தனித் தனிப் புத்தகங்கள். சோவியத் மத்திய ஆசியா, சோவியத் நாடுபற்றிய மிக அதிகமான தகவல்கள்கொண்ட புத்தகங்களும் குறிப்பிடப்படவேண்டியவை.

இலக்கியத் தன்மைபெற்ற இதர படைப்புகளில் வரலாறுபற்றி அவர் எழுதிய நூல்கள் அடங்கும். மத்திய ஆசியாபற்றிய அளவில் பெரிய வரலாறு மத்திய ஆசியா கா இதிகாஸ் என்பது. இதை சாகித்திய அக் க தெ மி கெளரவித்துள்ளது. இந்நூல்பற்றி முன்னரே குறிப்பிடப்பட்டிருக்கிறது. ரிக் வேதிக் ஆரியா; அக்பர்; மற்றும் ஃபவுண்டர்ஸ் ஆஃப் பிரிட்டிஷ் ருல் இன் இண்டியா என்ற புத்த கத்தின் இந்தி மொழிபெயர்ப்பு போன்றவை முற்றிலும் சுயமான படைப்புகளாக இல்லாமல் இருக்கலாம். ஆனல் அவருடைய புரதத்வ நிபந்தாவளி (புராதன வரலாறு மற்றும் தொல்பொருள் ஆய்வு சம்பந்தமான கட்டுரைகள்) மிகவும் முக்கியமான சில ஆராய்ச்சிக் கட்டுரைகளைக் கொண்டுள்ளது.

இந்தி இலக்கியத்தின் ஆரம்ப வரலாற்றின்மீது ராகுல் புதிய வெளிச்சம் பாய்ச்சிஞர். சம்ஸ்கிருதம் மற்றும் பாலி கவிதைகளின் இரண்டு தொகுதிகளை தொகுத்ததன் மூலம் (இத் தொகுப்புகள் இன்னும் வெளிவரவேயில்லே) ராகுல், தனது இறுதி நாட்களில், மரபுரீதியான புராணமல்லாத கவிதைகளின் சுருக்கத்தை, தற்கால வாசகரும் படித்து ரசிக்கக்கூடிய வகையில், உருவாக்க முயன்முர். இந்தி கால்யதாரா (அபப்பிராம்ஸா)வைத் தொகுத்துப் பதிப்பிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோதே அவர் இந்த வேலையை யும் மேற்கொண்டார். காவ்யதாரா புராதன இந்திக் கவிதையை சித்தர்கள், நாதர்களின் மறைவான மற்றும் அந்தரங்கமான கவிதைகளோடு இணே க்கு ம் முயற்சியாகும். சாரகபா(த்), கண்காா(த்), டோம்பி-பா போன்ற முற்காலக் கவிஞர்களின் படைப்புகள் இதில் அடங்கியுள்ளன. அக்கவிஞர்கள், ஆயிரம் வருடங்களுக்கு முன்பே, கடுமையான சாதி அமைப்பையும் அதன் ஆசார அனுஷ்டான முறைகளையும் துணிச்சலோடு தூக்கியெறிந்த வர்களாவர். கபீர், தாதா, ராய்தாஸ், நாமதேவர் போன்ற பிந்திய நூற்ருண்டுகளேச் சேர்ந்த புரட்சிக்காரர்களும் சம்பிர தாயங்களோடு ஒத்துப்போகாதவர்களுமான இந்திக் கவிஞர்களின் முன்குேடிகள் இவர்கள். அப்துர் ரஹ்மான், புப்பா-தந்த் ஆகியோரின் இயற்கை வர்ணனை, மானிடக் காதல் விவரிப்புகளில், கதா-சப்தஷதியில் ஹலா உயர்வாகக் கொண்டாடிய கவிதை வகையின் சாயைகளைக் காணமுடியும். ராகுல், ஸ்வயம்புவின்