பக்கம்:ராகுல் சாங்கிருத்யாயன்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盏密 ராகுல் சாங்கிருத்யாயன்

கொண்டு பிரிப்பதற்கில்லை என்று அது உறுதியாக அறிவித்து விட்டது. சர்தார் கே. எம். பணிக்கரின் மறுப்புக் குரலும் கவனிக்கப்படவில்லை.

இவ்வகையில் ராகுல் மற்றுமொரு முன்னேடி வேலையும் செய் தார். இந்தி இலக்கியத்தின் விஸ்தாரமான வரலாறு பற்றிய பெரிய தொகுதி ஒன்றை அவர் பதிப்பித்தார். அலகாபாத், இந்தி சாகித்திய சம்மேளன் இந்தப் பணிக்கு உதவி புரிந்தது. இந்தியின் கிளை மொழிகளுக்கு (உப பாஷைகள்) மட்டுமே இத் தொகுப்பு அக்கறை காட்டியுள்ளது. தாய் மொழிகள்போஜ்புரி, மைதிலி, மகாகி, அவதி, பிராஜ், பந்தல்கண்டி, ராஜஸ்தானி, மால்வி, நிமதி, மற்றும் இமாசலப்பிரதேசத்தின் பல்வேறு பகாரி மொழிகள்-ஒவ்வொன்றைப் பற்றியும் தகுந்த நிபுணரும் பண்டிதருமான அறிஞர்கள் புலமை நிறைந்த கட்டுரைகள் எழுதியிருக்கிருர்கள். இந்த ஒரு தொகுப்பிற்காகவே ராகுல் தேசீய கவுரவம் பெறுவதற்குத் தகுதி உடையவராவார். பத்மபூஷண் விருது, அவருடைய வாழ்வின் அந்திம காலத்தில், அவர் அதை உயர்வாக மதிக்க முடியாத நிலையில் இருந்தபோது, அவருக்கு வந்து சேர்ந்தது. அதற்குள் அவருடைய ஞாபக சக்தி மிக மோசமாக பாதிக்கப்பட்டுவிட்டது.