பக்கம்:ராகுல் சாங்கிருத்யாயன்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கிய சாதனைகள் 49

தருகிரு.ர். எனவே அவரது நடை ஒரே சீராக இருப்பதில்லை. ஆனல் மொழி அலங்காரக் குறைபாடுகள் பற்றி வாசகன் கவலைப் படுவதேயில்லை; ஏனெனில், ஏதாவது ஆச்சர்யமான, அதிர்ச்சி தருகிற, புதுமையாய் வெளிப்படுத்துகிற விஷயம் ஓயாது அவன் முன் தென்பட்டவாறு இருக்கிறது-அவனுக்கு அதற்குமுன் ஒரு போதும் எதிர்பட்டிராத ஒரு கருத்து அல்லது விவரிப்பாகும் அது. சாதாரண வாசகர்களின் கற்பனை சதா கிண்டிவிடப்பட்டவாறு இருக்கிறது; ராகுல் அவர் பாட்டுக்கு பக்கம் பக்கமாகத் தகவல் களே எழுதிக்கொண்டே போகிரு.ர். அவை எல்லாம் வேறு இடங் களில் படிப்பதற்கு அலுப்புத்தரும் விஷயமாகவே அமையக்கூடும். இங்கோ வாசகன் ராகுலுடன் சேர்ந்து, கலாசார பூர்வகுடிஇயல், தொல்பொருள் இயல், சமுதாய இயல், தேவ இயல், மொழி இயல் மற்றும் இலக்கியக் கண்டுபிடிப்புகளின் புதிய படிமானங்களே ஆராய்ந்தவாறு செல்கிருன், அறிமுகமாகியிராத நிலப்பகுதிக்கும் பெரும் பரப்புக்கும் போகிற இந்தப் பெரிய முடிவற்ற பயணத்தில், இந்த அறிவுத் தேடவில், மனித முயற்சியின் மாபெரும் வெளிப் பாட்டைப் பார்வையிடுவதில் வாசகனும் ஒரு கூட்டாளி ஆகி விடுகிற மகிழ்ச்சியை அடைகிருன் பெருமையின் அல்லது சோகத் தின் உணர்வு அவனை ஒருபோதும் தாக்குவதில்லை; ஏனெனில், சாதாரண அனுபவங்களில்கூட அதிவிசேஷத் தன்மையைக் காண் கிற ராகுலின் உற்சாகம் வாசகனையும் தொற்றிக்கொள்கிறது; பிடித்தாட்டுகிறது.

கவிஞர் கீட்ஸின் சுற்றியலையும் இயல்பை ராகுல் ஒரு தத்துவ மாகவே ஆக்கிக்கொண்டார்

எப்போதும் எண்ணத்தைச் சுற்றித் திரியவிடு ஆனந்தம் ஒருபோதும் வீட்டில் கிட்டாது. ஆளுல், அவர் தனது கூம்கார் சாஸ்திரம் (ஊர் சுற்றும் அறிவியல்) என்ற நூலில், கற்பனலங்கார நழுவுதல் கொள்கை யைப் பரிந்துரைக்கவில்லை; பற்றுதல் இல்லா வாழ்வுக்கு ஏற்ற திட்டவட்டமான ஒரு செயல் குறிப்பையும், அதே சமயம் வாழ்க்கை என்கிற இந்தத் திறந்த புத்தகத்தின் ஒவ்வொரு எழுத்தையும் படிப்பதற்கான வழிவகைகளையும் நுட்பமாகத் தீட்டியிருக்கிரு.ர். ஒரு சந்நியாசியாக அவர் பெற்ற ஆரம்பகாலப் பயிற்சி, அவரது பிந்திய ஆரிய சமாஜப் பின்னணி, அதற்கும் பிற் பட்ட கிசான் சபை அரசியலில் அவர் தீவிரமாகக் கலந்துகொண்ட அனுபவம், திபெத்திலும், சோவியத் ரஷ்யாவிலும் தங்கியிருந்தது (இவை இரண்டும் முற்றிலும் நேர்மாருன இடங்கள்) இவை எல்லாம் சேர்ந்து ஒரு இலட்சிய ஊர் சுற்றி (கூம்கார்) ஆவதற்கு அவரை தகுதிப்படுத்தின. -