பக்கம்:ராகுல் சாங்கிருத்யாயன்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கிய சாதனைகள் む。

இயல் சொற்கள் போன்ற கட்டுரைகள் அதில் இருக்கின்றன. தான் ஒரு பிரயாணியாகவும் போதகராகவும் வாழவே ஆசைப் பட்டதாக அவர் முதலாவது கட்டுரையில் கூறியிருக்கிரும். 'எனது பயணக் கதைகளே சொல்லவும், அவற்றைத் திருத்தி அமைக்கவும் முயன்றதில் நான் கட்டுரைகள் எழுதத் தொடங்கி னேன். முதல் கட்டுரை 1915-ல் வெளிவந்திருக்கலாம். முதலா வது ஒத்துழையாமை இயக்கத்தில், 1921-ல் நான் சாப்ரா சிறை யில் இருந்தேன். ஒரு புதிய சமுதாயம் பற்றிக் கனவு கண்டேன். அதைப்பற்றி சம்ஸ்கிருதத்தில் செய்யுள்கள் எழுதினேன். ஐந்து காண்டங்கள் இயற்றினேன். ஆளுல் அச்செய்யுள்கள் அனைத்தும் பயனற்றவை என உணர்ந்து, அதை பய்சாவின் ஸாதி என்ற தலைப்பில் இந்தியில் திரும்ப எழுதினேன். ஆங்கிலத்திலிருந்து நான்கு நாவல்களைத் தழுவி இந்தியில் எழுதினேன்; இந்தியத் தன்மைக்கு ஏற்றவாறு அவற்றை நான் மாற்றி அமைத்தேன் . . . 1935-ல் அடக்கி ஒடுக்கப்பட்ட ஏழை எளியவர்களின் உண்மை யான வாழ்க்கைக் கதைகளைப் பதிவு செய்யவேண்டும் என்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது. லதாமி கே பச்சே ஆந்த வகையில் எழுதப்பட்டது ஆகும். 1938-ல் ஜினே கே லியே என்ற எனது முதல் நாவலே எழுதினேன். 1941 அல்லது 42-ல் பகவத்சரண் உபாத்யாயா எழுதிய வரலாற்றுக் கதைகள் சிலவற்றைப் பார்த் தேன். அவர் தனது பணியைப் பூர்த்தி செய்திருந்தால், நான் வால்கா ஸே கங்காவை எழுதியிருக்கமாட்டேன் . . . ஆளுல் ஹஜாரிபாக் சிறையில் வால்கா லே கங்காவின் இருபது கதை களையும் நான் எழுதி முடித்தேன் . . . சீர்துக்கிப் பார்த்து, எது எனது சிறந்த கதை என்று சொல்வது எனக்குச் சிரமமாக இருக் கிறது. ஆனால், அந்தத் தொகுதியில் பிரபா’தான் மிகச் சிறந்தது என்று அநேக விமர்சகர்கள் குறிப்பிடுகிருர்கள். ஆயினும், அதே தொகுதியில் உள்ள ‘நாகதத்தா'வையும் சுரய்யா'வையும் நல்ல கதைகளாகவே நான் கருதுகிறேன்’ (ராகுல் நிபந்தாவளி, பக்கங்கள் 3-5). - -

வால்கா லே கங்கா ராகுலின் மகத்தான் கற்பனைப் படைப்பு ஆகும். இந்தி முற்போக்கு இலக்கியத்தில் அது ஒரு மைல் கல் என்று அநேக வருடங்களாகப் பேசப்படுகிறது. இந்திய வரலாற்றின் உண்மைகளைத் தன்னிச்சையாகத் திருத்தி மாற்றி எழுதியிருப்பதை மறைபொருள்வாத மற்றும் புதுப்பிக்கும் போக்கு களைச் சேர்ந்த விமர்சகர்கள் எதிர்த்திருக்கிரு.ர்கள். வரலாற்று மற்றும் இயங்கு இயல் பொருள் முதல் வாதத்தை ஆதாரமாகக் கொண்டு மறுவிளக்கம் செய்யப்பட்டுள்ள சித்திரம் என்று மார்க் சீயவாதிகள் அதைக் கூறுகிருர்கள். இந்தப் படைப்பைப்பற்றிய ஒரு விளக்கமான விவரிப்பை இங்கு தருவது பொருத்தமாக இருக்