பக்கம்:ராகுல் சாங்கிருத்யாயன்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5晏 ராகுல் சாங்கிருத்யாயன்

கும். உண்மையில், அது கற்பனை வடிவத்தில் எழுதப்பட்ட ஒரு வரலாற்றுப் படைப்பேயாகும். முதல் பதிப்பின் முன்னுரையில், 23-8-42-ல், அவர் இப்படி எழுதிஞர்: -

'மனிதன் தமது ஆதிகால ஆரம்ப நிலையிலிருந்து இன்றைய இந்த நிலைமையை அடைந்திருக்கிருன். கடுமையான போராட் டங்களை அவன் கடக்கவேண்டியிருந்தது. மனித சமூக முன் னேற்றத்தின் சிந்தனரீதியான தன்மையை நான் மாணவ சமாஜ் என்ற நூலில் விவரித்தேன். அதை இன்னும் எளியமுறையில் எடுத்துச் சொல்லலாம். எனவே தான் இந்தப் புத்தகத்தை எழுதும் உந்துதல் எனக்கு ஏற்பட்டது. இந்த வளர்ச்சியை சுலப மாகப் புரிந்துகொள்வதற்காக இதை எழுதினேன். இந்திய வாசகர்கள் இவ்வளர்ச்சியை எளிதில் புரிந்து கொள்வார்கள் என் பதற்காக, இந்தோ-ஐரோப்பிய இனத்தவரை ஒரு உதாரணமாக நான் எடுத்துக்கொண்டேன். நான் எடுத்துக்கொண்டுள்ள இனத்தைவிட, எகிப்திய, அசிரிய, சிந்துசமவெளி நாகரிகங்கள் பல லட்சக்கணக்கான வருடங்கள் மிகவும் முற்பட்டவையாகும். அவற்றை எடுத்துக்கொண்டால், எழுத்தாளன், வாசகன், இரு சாராருக்குமே சிரமங்கள் அதிகரிக்கும்.

"ஒவ்வொரு காலகட்டத்திலும் இருந்திருக்கக்கூடிய இந்திய சமுதாயத்தின் சரியான சித்திரத்தைத் தருவதற்கு நான் முயன்றிருக்கிறேன். ஆளுல் இந்தவித முதல் முயற்சிகளில் தவறு கள் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் எப்போதும் உண்டு. இதை விடச் சரியான, திட்டவட்டமான சித்திரிப்பை வருங்கால எழுத் தாளர்கள் தருவதற்கு நான் உதவியாக இருப்பேனல்ை, அதை எனது பெறும்பேறு ஆகவும் சாதனையாகவும் மதிப்பேன்.

பந்துல் மால் (புத்தர். காலம்பற்றி, சிம்க சேநாபதி என்ருெரு தனி நாவலே நான் எழுதியிருக்கிறேன். -

இந்திய வரலாற்றின் 8000 வருடங்களை, அதன் புராதன ஆரம்ப கட்டம் முதல் 1942 வரை, இந்தப் படைப்பு தனது பின்னணியாகக் கொண்டிருக்கிறது. நிஷா, திவா', அமிரித் ஸ்வா', 'புருகத்' என்ற முதல் நான்கு கதைகளும் வரலாற்றுத் தன்மையை (கி. மு. 6000 முதல் கி. பி. 2600 வரை) சித்திரிக் கின்றன. இக்கதைகளை உருவாக்குவதில் கற்பனை வேலை செய் திருந்தபோதிலும், இவை வெறும் கற்பனைக் கதைகள் இல்லை. இந்தோ-ஐரோப்பிய மற்றும் இந்தோ-ஈரானிய மொழிஇயல், வரலாற்று ரீதியான பாஷா ஞானம் ஆகியவற்றில் ராகுல் செய்த ஆழ்ந்த ஆய்வுகளின் விளைவு இக்கதைகளில் குறிப்பிடத்தகுந்த அம்சமாக இருக்கிறது என்று பதந்த் ஆனந்த கெளசல்யாயன் அவற்றைப் பாராட்டி எழுதினர்.