பக்கம்:ராகுல் சாங்கிருத்யாயன்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

荔等 ராகுல் சாங்கிருத்யாயன்

சிந்து நதிக்கரைகளில் வசித்த அசிரியர்கள், திராவிடர்கள் ஆகியோரை இனத்து அது உருவாக்கப்பட்டுள்ளது என்று டாக்டர் பகவத்சரண் உபாத்யாயா கூறுகிருர், (2) வால்மீகி இராமாயணம் இயற்றப்பட்ட காலம் சுங்க ராஜவம்சத்தினரின் காலத்தோடு ஒட்டியதாக இருக்கலாம் என்று ராகுல் ஊகித்திருக் கிருர். இதைக் குறித்து டாக்டர் ராம்பிலாஸ் சர்மா பரிகாசமாக இவ்விதம் எழுதியிருக்கிருர்- என்ன புதுமையான சமுதாய இயல்: இராமன் சுங்க சக்கிர வர்த்தியின் பிம்பமாகிருன். காளி தாசனின் குமார சம்பவத்தில் வருகிற குமாரன் குமாரகுப்தன் எனும் சுங்க மாமன்னனின் பிம்பம். தசரதர், கெளசல்யா, சீதை, இராவணன் ஆகியோரின் முன்மாதிரிகள் யார் யார் என்பதை ராகுல் இனி நமக்குச் சொல்லவேண்டும்! டாக்டர் ராம்பிலாஸ் சர்மா, அவரது தீவிர உற்சாகத்தில், ராகுலை மட்டுமின்றி, ஹலாரி பிரசாத்துவிவேதியையும் பிராமண இனப்பற்று உடை கவர்கள் என்றும் புதுப்பிப்பாளர்கள் என்றும் சாடியிருக்கிருர்! (3) சுபர்ணு யவ்தேயா கதையில் ஹஒனர்களைத் தோற்கடித்த சக்கிரவர்த்தியின் பெயர் சமுத்திரகுப்தன் என்றிருக்கிறது. உண்மையில், அவன் ஸ்கந்தகுப்தன் ஆவான். (4) துர்முகி'யில் ஹர்ஷவர்த்தனனின்சகோதரன் ராஜ்யவர்த்தனன் கன்யாகுப்ஜாதி பதியாகக் காட்டப்பட்டுள்ளது. உண்மையில், அவன் ஸ்தானேஸ் வரை (தற்கால தானேலர்) ஆண்டவன். ஹர்ஷன் rத்திரிய சதவாகன வம்சத்தைச் சேர்ந்தவன் என்று கூறப்பட்டுள்ளது. ஆளுல், சதவாகனர்கள் பிராமணர்களாவர்; அவர்கள் ஹர்ஷனின் முன்ளுேர்கள் அல்லர். (5) ஜெய்சந்த், கதையில் சித்திரித்திருக் கிற முறையில், அவனது மூல புருஷனுக்கு நியாயம் செய்கிறவனுக இல்லை. அவனே ஒரு வீர புருஷளுக முஸ்லிம் வரலாற்ருசிரியர்கள் குறிப்பிடுகிருர்கள். ஆனல், ராகுவின் ஜெய்சந்த் சுகபோகங்களை விரும்பும் காமதுர்த்தக் கிழவனுகக் காணப்படுகிருன். (6) சுரய்யா கதையில், கதாநாயகி அபுல் ஃபாசலின் மகளாகவும், அவள் தோடர்மல்லின் மகளுன கமலை மணம் புரிவதாகவும், இரு வரும் சேர்ந்து ஐரோப்பாவுக்கு யாத்திரை போகிரு.ர்கள் என்றும் இருக்கிறது. இது வரலாற்றை உண்மையிலிருந்து வெகுதூரம் விலக்கிச் செல்வதாகும். --

இப்படிச் சில குறைகள் இருப்பினும், இந்தப் படைப்பு, அதன் திட்ட அமைப்பிலும் செயல்முறையிலும் விசேஷமான ஒரு சாதனை என்பதில் சந்தேகமில்லை. 8000 வருட வரலாற்றை வெகுவாக ரசித்துப் படிக்கக்கூடிய விதத்தில் 386 பக்கங்களில் சுருக்கித் தந்திருப்பது, ஒரு விமர்சகர் மற்றும் படைப்பு ஆசிரியரின் செறி வும் உறுதியும் நிறைந்த பார்வையை வெளிப்படுத்துகிறது. ஒரு கதாசிரியனின் திறமையும், வறண்ட விவரங்களை நேசிக்கும் ஒடு