பக்கம்:ராகுல் சாங்கிருத்யாயன்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கிய சாதனைகள் 5?

வரலாற்ருசிரியனின் தன்மையும் அபூர்வமாக இணைந்து காணப் படுகிறது. இதில். இந்தப் புத்தகம் விவாதத்தை எழுப்பியது. நக்னவாதி வேதநிந்தக ராகுல் (ராகுல் நிர்வாணத்தை ஆதரிப்பு வர், வேதங்களைப் பழிப்பவர்) என்று எவரோ அநாமதேய சுவாமிஜி ஒருவர் விஸ்வபந்து சஞ்சிகையில் ஒரு கட்டுரையில் ராகுலே வசைபாடியிருந்தார். ஆளுல் அதற்கு மிகுந்த புகழ் ஏற் பட்டுள்ளது. இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு வெகுகாலம் முன்னரே, வால்கா லே கங்கா, கார்க்கியின் தாய் மாதிரி, அனைத்து இந்திய மொழிகளிலும் ஏக காலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, பல பதிப்புகள் பிரசுரமான புத்தகங்களில் ஒன்ருகத் திகழ்ந்தது. ஆங்கிலம், ரஷ்யன், செக், போலிஷ் மற்றும் பல அயல்நாட்டு மொழிகளிலும் அது மொழிபெயர்க்கப்பட்டு, மிகப் பிரபலம் அடைந்தது. ராகுலின் எழுத்துக்களில், இந்த ஒரு புத்தகம், இந்தி மொழிக்கு மட்டுமின்றி இந்திய இலக்கியத்திற்கே வர லாற்றுப் பெருமை கொண்ட பங்களிப்பாக உயர்ந்து நிற்கிறது.

ராகுல் பிரேம்சந்த் பற்றி இப்படி எழுதினர்:

'நான் 1915-ல் அவர் பெயரைக் கேட்டிருந்தேன்; அவரது படைப்புகளைப் படித்திருந்தேன். ஆனல் வெகுகாலத்துக்குப் பின்னரே நான் அவரை சந்தித்தேன். அவருடைய எழுத்து நடையில் மிகப் பெரும் சிறப்பு ஒன்றிருந்தது. விமர்சகர்களும், அவரது சமகால இந்தி மற்றும் உருதுப் பண்டிதர்களும் அதை ஒரு குறையாகக் கருதினர்கள். அவருடைய எழுத்து நடை அவர் வாழ்க்கையைப்போலவே எ னி ய தா. க இருந்தது. தனது மொழியை அலங்காரம் பண்னவோ, அதில் செயற்கைத்தனம் காட்டவோ அவர் ஒருபோதும் விரும்பியதில்லை. பெரும் அளவு மக்களின் பெரும் அளவு நன்மைக்காக (பகுஜன் ஹிதய, பகுஜன் சுகாய்) அவர் எழுதினர். அவைசியமான பண்டிதத்தனத்தைத் தன் மொழி மீது சுமத்த அவர் ஆசைப்பட்டதேயில்லை. நான் அவருடைய நூல்களின் கீர்த்தியை 1921-ல், மறுபடியும் ரேவதியா கிராமத்தில் கண்டேன். அங்குள்ள படிப்பறிவில்லாத மக்களைக் கூட அவை அடைந்திருந்தன. 1920லும் 1930லும், ஒத்துழை யாமை இயக்கத்தின் செய்தியைப் பரப்புவதற்கு அவருடைய எழுத்துக்கள் உதவிபுரிந்தன. நான் அவரை பணுரசில் 1925-ல் கண்டேன். பிரபல உருது எழுத்தாளர் ஒருவர் அவருடைய உரை நடையை பூரப் கி போலி' (கிழக்கத்திய பேச்சு வழக்கு) என்று கண்டனம் செய்தார். இக்கனவான் லக்னெளவில் மேன்மையான நவாப் குடும்பத்திலிருந்து வந்தவர். அவர் ஒரு நாவல் எழுதி யிருந்தால்-அல்லா அவருக்கு அருள்புரியட்டும்-குடியானவன் ஹோரி வாயிலிருந்து அரபுமொழி வெளிவரும்படி அவர் செய்

5 -