பக்கம்:ராகுல் சாங்கிருத்யாயன்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

溶5 ராகுல் சாங்கிருத்யாயன்

திருப்பார். ஓ பிரேம்சந்திடம் (சம்ஸ்கிருதமயமான) இந்தியின் செம்மையும் ஆழமும் இல்லை!" என்று இந்திப் பண்டிதர்கள் சொன்னர்கள். இந்த இலக்கிய வகைக்கு, நாவலுக்கு, உருதுவை யும் இந்தியையும் உபயோகப்படுத்தும் களத்தில் அவர் ஒரு முன் ளுேடியாக இருந்தார். கடைசியாக நான் அவரை சாரநாத் அருகில் உள்ள அவருடைய பிறந்த ஊரில் சந்தித்தேன். இஸ்லாமிய காலத்துக்கு முற்பட்ட, அல்லது இஸ்லாமிய காலத்தின் ஆரம்ப நாட்களைச் சார்ந்த சிற்பத்தின் பழைய தலை ஒன்றை நான் கண்டெடுத்தேன். அதன் தலைமுடி அமைப்பிலிருந்து அது ஒரு காயஸ்தசின் உருவமாக இருக்கும் என்று தோன்றியது. அவ ருடைய மூதாதையரில் மிக முந்தியவர்களில் ஒருவரின் தலையாக இருக்கலாம் அது. நான் அதை பிரயாக் மியூசியத்துக்கு அனுப்பி னேன். அங்கே, ஒரு பாய்மீது உட்கார்ந்திருக்கையில், இதுதான் எங்கள் கடைசிச் சந்திப்பாக இருக்கும் என்று நான் எண்ணவே வில்லை. நான் திபெத்தில் அவரது மரணச் செய்தியைக் கேட் டேன். அன்று, அவருடைய நாவல்களில் உள்ள சிறந்த கதை மாந்தர் அனைவரும், பிரேம்சந்தின் சுய வெளிப்பாடுகள்போல எனக்குத் தோற்றம் காட்டினர். அவர் இந்தியாவின் சாகா வரம் பெற்ற எழுத்தாளர், கலைஞர் . . . நூற்ருண்டுகள் ஓடி மறையும். பிரேம்சந்தின் கற்பனை உலகம், இந்தியாவின் இன்றைய மாறிவரும் காலகட்டத்தை, தெளிவாகவும் உண்மையான வார்த்தைகளிலும் பதிவுசெய்து காப்பாற்றி நிற்கும் (ராகுல் நிபந்தாலளி, பக்கங்கள் 7-9).

அவரது மத்திய ஆசியாவின் வரலாறு, இரண்டு பாகங்கள் தவிர மற்ருெரு மாபெரும் சாதனே, உலக தத்துவங்களையும் இந்திய தத்துவ முறைகளையும் ஒப்பீடு செய்து ராகுல் எழுதிய நூல் ஆகும். பெளத்த சிந்தனை (100 பக்கங்கள்), இஸ்லாமிய சிந்தன (125 பக்கங்கள் பற்றி ஒரே புத்தகத்தில் இவ்வளவு விரி வாகவும் சிறப்பாகவும் சித்திரித்துக்காட்டும் நூல் இந்தியில் வேறு எதுவும் இல்லே. -

அதன் நான்கு பக்க முன்னுரையிலிருந்து-முதலும் முடிவு மான-இரண்டு பாராக்களை எடுத்துச் சொல்லவேண்டும் என்கிற ஆசையை அடக்க இயலவில்லை. இம்முன்னுரை 1942-ல், ஹஜாரி பாக் மத்திய சிறையில் எழுதப்பட்டது. இம் மேற்கோள், வாழ்க் கையின்மீதும் உலகத்தின்மீதும் பொதுவாகவும், சிறப்பாக 1940கள் கால இந்தியாமீதும், ராகுல் கொண்டிருந்த தத்துவ ரீதி யான அணுகலின் சாரத்தைத் தருகிறது: -

பல கோடி வருடங்களாக மனிதன் பூமிமீது வசித்து வந்த போதிலும், அவனது அறிவு முன்னேற்றத்தின் மிக உயர்வான