பக்கம்:ராகுல் சாங்கிருத்யாயன்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கிய சாதனைகள் 荔姆

மகிமை பொருந்திய காலம் கி.மு. 5000 முதல் கி.மு 3000-க்கு உட்பட்டதேயாகும். மனித சமுதாயத்தின் தோற்ற அமைப்பை மாற்றிய விவசாயம், பாசனமுறை, ஞாயிறுபஞ்சாங்கம், மற்றும் இவை போன்ற முக்கியமான கண்டுபிடிப்புகளையும் அப்போது தான் அவன் செய்தான். அப்புறம், கி.பி. 1750க்குப் பின்னர் தான் மீண்டும் இத்தகைய அறிவார்ந்த வேகத்தை நாம் காண் கிருேம். நவீன கண்டுபிடிப்புகள் தொடர் சங்கிவியாகத் தொடங்குகின்றன. அப்போது முதல் காலகட்டத்தில் தத்துவம் இருந்ததில்லை. இரண்டாவது கட்டத்திலோ, தத்துவம் தனது வயது எல்லையையும் மீறி உயிரோடிருக்கிற ஒரு கிழவன்போல் தோன்றுகிறது. அவன் அவனுடைய வயதுக்காக மதிக்கப்படு கிருன்; ஆளுல், அவன் அறிவியலை - சோதனைரீதியாக உண்மைப் படுத்தப்பட்ட சிந்தனையை - தனக்குத் துணை கொள்கிறபோது தான் அவனுடைய வார்த்தைகள் மக்களின் கவனத்தைக் கவர் கின்றன. ஆனாலும், சர் ராதாகிருஷ்ணன் போன்ற பழைய வகை மத போதகர்கள் அதை ஒப்புக்கொள்வதில்லை; புராதன இந்தியாவில் தத்துவம் எந்தவொரு அறிவியல் அல்லது கலேயின் கைப்பாவையாகவும் இருந்ததில்லை. ஆனால், சுதந்திரமான சுயேச்சை நிலைமையை அது பெற்றிருந்தது’ என்று சொல்கிருர் கள். எனினும், இந்தியாவில், தத்துவம் எப்போதும் மதத்துக்குப் பின்பாட்டு பாடிக்கொண்டுதான் இருந்தது.

'உலகளாவிய தத்துவ ஓட்டங்களை கவனித்துப் பார்த்த பிறகு, அவை தேசியமாக இருப்பதைவிட அதிகம் சர்வதேசீயத் தன்மை பெற்றிருப்பதை ஒருவர் உணரமுடியும். ஒரு நாட்டின் ஒரு மதம் மற்ருெரு மதத்தினிடம் காட்டுவதைவிட, ஒரு தத்துவ சிந்தனை இதர தத்துவங்களின் கருத்துக்களை ஏற்றுக்கொள்வதில் மிக அதிகமான தாராளத் தன்மை காட்டியுள்ளது. தத்துவ சிந்தனைகளின் பின்னல் பொருளாதாரத் தொடர்பு செயல்பட வில்லை என்று சொல்வது தவறும் பிழையும் ஆகும்; ஆயினும், மதங்களோடு ஒப்பிடுகையில், ஒரு நாட்டின் சுயலாப அக்கறைகளை இன்னெரு நாட்டின்மீது சுமத்த தத்துவங்கள் முயன்றதில்லை. ஆகவே, அறிவியல் துறை தவிர, வேறு எதிலும் தத்துவத்தில் காணப்படுவது போன்ற, கங்கையும் அமுவும் தாஸ்லாவும் (டைகிரிசும் யூப்ரட்டிசும்) இணைந்து ஒடும் மாபெரும் சங்கமத்தை யும், நளாந்தா, பொக்காரா, பாக்தாத், கார்டோவாவின் அன்பான கலவையையும் நாம் காணவில்லை. காலமும் வசதிகளும் போதுமானபடி இல்லாததனுல், சைன மற்றும் ஜப்பான் தத்துவங் களை இத்தொகுப்பில் சேர்க்கமுடியாமல் இருப்பதற்காக நாம் வருந்துகிருேம். ஆனலும், தத்துவத் துறையில் குறுகிய தேசீயத்