பக்கம்:ராகுல் சாங்கிருத்யாயன்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

發霹 ராகுல் சாங்கிருத்யாயன்

யும் அடக்கி ஒடுக்கப்பட்டவர்களையும் மேம்படுத்துவதும், ஒரு சிறந்த சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவதற்கு அவர்களை இட்டுச் செல்வதும் அதன் பயனுக இருக்கவேண்டும்; அந்தப் புதிய சமுதாயத்தில் ஒவ்வொருவருக்கும் அதிகபட்ச வாய்ப்பும், தேவை களிலிருந்து விடுதலையும் சித்திக்கும்.

கடைசியாக, புத்தரும் காந்தியும் என்ற அவருடைய கட்டுரையி லிருந்து சில மேற்கோள்கள் இங்கே தரப்படுகின்றன. (இதன் மூலப் பிரதி ஆங்கிலத்தில் எழுதப்பட்டது என்றும், துரதிர்ஷ்டவச மாக அந்த எழுத்துப் பிரதி தொலைந்துவிட்டது என்றும் புத்தகத் தில் உள்ள குறிப்பு அறிவிக்கிறது. அது காந்தி கொலை செய்யப் பட்ட உடனே, 1948, ஆஜ்கல் என்ற இந்திப் பத்திரிகை பிரசுரித்த காந்தி விசேஷ மலரில் வெளி வந்தது. இதற்கு முன்பெல்லாம் காந்தியை மிகக் கடுமையாகவும், குறும்பாகவும் விமர்சித்து, நடை முறைக்கு ஒவ்வாத கனவுவாதி என்றும், பெரும் தொழிலதிபர் களின் ஏஜன்டு என்றும், ஒத்துழையாமை பற்றி கனவு உலக நம்பிக்கை கொண்டவர் என்றும் ராகுல் எழுதியுள்ளார். ஆனல், 1947 ஆகஸ்டு 15-க்குப் பிறகு, 1948 ஜனவரி 30-க்கு முன்னல், எழுதப்பட்ட இப் பாராட்டுரையில் அவருடைய கருத்து முற்றிலும் மாறிவிட்டது. இந்தியாவின் இரு பெரும் மனிதர்களையும் தெளி வாகப் புலன்படக்கூடிய முறையில் இதில் அவர் ஒப்பிட்டிருக் Goff:

சலப்பே சத்த பவன்து சுகி தத்தா-உயிர் வாழும் சகல ஜீவ ராசிகளும் சந்தோஷமாக இருக்கட்டும்-என்று புத்தர் உபதேசித் தார். ஆனல் அவர் ஒரு செயலுக்கம் இல்லாத வானம் பார்த்த நபர் அல்லர். அவர் யதார்த்தவாதி. எனவே செயற் களத்தில் பிரவேசிக்கும்படி அவர் தனது சீடர்களுக்கு வழி வகுத்துக் கொடுத்தார். மிகப் பெரும்பான்மையோருக்கு மிகப் பெரும் அளவு தன்மை செய்வதற்காக சுற்றித் திரியும்படி அவர்களை அவர் கேட்டுக்கொண்டார். மிகப் பெரும் அளவு நன்மையும் வெகு பேரளவு அக்கறைகளும் ஒரு சிலரது சந்தோஷங்களோடும் சுய லாப அக்கறைகளுடனும் அநேக முறைகள் மோதிக்கொள்ள நேரும் என்பதை அவர் அறிந்திருந்தார். சமூகம் முரண்பட்டு எதிர்க்கும் அக்கறைகள் பலவற்றைக்கொண்டு பிளவுபட்டிருந்தது. தனி நபர் சொத்து சேகரம் செய்வதும் பேராசையுமே துன்பத் தின் அடிப்படைக் காரணமாகும் என்று புத்தர் கருதினர். பேராசையிலிருந்து திருட்டு, சுரண்டல், கூட்டு ஒப்பந்தம் எல்லாம் உற்பத்தியாகின்றன. இத்தகைய சட்ட விரோதச் செயல்களி விருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவே மனிதன் உறவு முறை அமைப்பை உண்டாக்கினன். இந்த ஏற்பாட்டில்