பக்கம்:ராகுல் சாங்கிருத்யாயன்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5ಆಹಹيَفييه

மகாபண்டிதர் ராகுல் சாங்கிருத்யாயனின் வாழ்க்கையும்படைப்பு களும், அவருடைய வரலாற்றை எழுத முனையும் எந்த எழுத்தாள ருக்கும் ஒரு அறைகூவலாகவும் கடினமான காரியமாகவுமே இருக் கின்றன. இதற்கான முதற்காரணம் அவரைப்பற்றிய முழுமையான நல்ல நூல், இந்தி மொழியில்கூட, இல்லை. இது ஒரு காரணம். அவருடைய படைப்புகள் பன்முகப் பட்டவையாகவும் மிகப் பரந்தனவாகவும் உள்ளன: மற்ருெரு காரணம் அவரது சாதனை களின் சகல தன்மைகளையும் விரிவாக எடுத்துரைப்பது என்பது சாத்தியமற்றது ஆகும். உதாரணமாக, எனது வாழ்க்கைப் பயணம் மேரி ஜீவன் யாத்ரா என்ற அவருடைய சுயசரிதையை எடுத்துக்கொள்வோம். அதன் இரண்டு பாகங்கள் 1944-லும் 1950-லும் வெளி வந்தன; முதல் பாகம் 564 பக்கங்களும் இரண் டாம் பாகம் 783 பக்கங்களும் கொண்டவை. இவையிரண்டுமே மறு பிரசுரமும் பெறவில்லை. அவரது சுறுசுறுப்பான வாழ்வில் 1944 முடிய நிகழ்ந்தவற்றை மட்டுமே அவை கூறுகின்றன. மூன்று பாகங்கள் அவர் இறந்த பிறகு வெளிவந்தன. அவைகூட அவருடைய வாழ்க்கையின் கடைசிப் பகுதியை விவரிக்கவில்லை. எண்ணற்ற டயரிக் குறிப்புகள் இன்னும் பிரசுரமாகாமலே இருக் கின்றன. எனவே, அவரைப்பற்றி அவரே எழுதியுள்ள இந்த மூவாயிரம் பக்கங்களையும் ஒருவர் ஒரு அத்தியாயம் என்ற குறுகிய அளவில் சுருக்கித் தருவதென்ருல் அது சும்மா மேலோட்டமான தாகவே அமையும். அவரது ஏனைய படைப்புகளுக்கும் இது பொருந்தும். அவை, அனுபந்தத்தில் குறிப்பிட்டுள்ளபடி 125 ஆகும்; இந்தி, சம்ஸ்கிருதம், பாலி, திபெத், போஜ்புரி ஆகிய ஐந்து மொழிகளில் அவை எழுதப்பட்டிருக்கின்றன. தத்துவம், வரலாறு, சமூகவியல், அறிவியல், பயண நூல், வாழ்க்கை வரலாறு கற்பனைப்படைப்பு, நாடகம், கட்டுரை, அகராதி, இலக்கணம், மூல நூல்களைப் பதிப்பித்தல், ஆய்வு, திபெத் இயல், புத்த சமயம், நாட்டுப்புற இலக்கியம், அரசியல், துண்டுப்பிரசுரப் பிரசாரம் ஆகிய விஷயங்களை அவை கொண்டுள்ளன. அவருடைய பிரசுரங்கள் பலதரப்பட்டவையாகும்: மொழிபெயர்ப்புகள், திபெத் மொழி மற்றும் சம்ஸ்கிருதத்திற்கான ஆரம்பப் பாட