பக்கம்:ராஜாம்பாள்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 இராஜாம்பாள்

சாமிநாத சாஸ்திரி. நீ படித்திருந்தாலல்லவோ உனக்குத் தெரியப்போகிறது! முட்டாளுக்கு என்ன தெரி யும்? ஆகையால் சொல்லுகிறேன் கேள். கோவில்களில் அல்லது அரண்மனைகளில் யானைகளை வைத்துக்கொண் டிருக்கிறார்களே, அவர்கள் அந்த யானைகளுக்கு நித்தியம் கால் கோணி அல்லது அரைக் கோணி அரிசி வைப்பது வழக்கம். அந்த யானையானது சாப்பிடும்போது ஒரு கவளத்தைச் சிந்திவிட்டால் அதனல் அதற்குக் கெடுதி உண்டோ? அல்லது விசனம் அடையுமோ? அடையாது. ஆளுல் சிந்தின அரிசியோ லட்சக்கணக்கான எறும் பு களுக்கு முழு வயிற்றுக்கு ஆகாரமாகிறது. யானைக்கு அற்பமானது எறும்புகளுக்குப் பூர்த்தியான ஆகாரம் . அதைப்போல் உனக்கு அற்பமான ஐந்து அல்லது பத்து, ரூபாய் ஏழைகளுக்குப் பிரமாதம். ஆகையால் ஒவ்வொரு வரும் அவர்கள் சக்திக்குத் தகுந்த அளவு ஜீவிக்கச் சக்தி யில்லாத தம் பந்துக்களுக்கோ அல்லது கூன், குருடு, நொண்டி முதலானவர்களுக்கோ தர்மம் செய்யவேண் டும். அவரவர்கள் வயிறு வளர்ப்பது பெரிதல்ல. கேவலம் நாயும் எப்படியாவது தன் வயிற்றை நிரப் பிக்கொள்ளு கிறது. தங்கள் சக்திக்கு ஏற்றபடி யார் தர்மம் செய்ய வில்லையோ அவர் தாயினுங் கேடுகெட்ட நாய்க்குச் சமானமே தவிர மனுஷ ஜன்மத்தில் சேர்க்கையல்ல.

கனகவல்லி: யானை சிந்தும் அரிசி எறும்புகளுக்குத் தீனியாவது வாஸ்தவமே, ஆளுல் யானையானது எவ்வளவு பருமன யிருக்கிறது: எறும்போ எவ்வளவு சிறிதாயிருக்கி றது. மனுஷரெல்லாம் ஏறக் குறைய ஒரே அளவாய்த் தானே இருக்கிறார்கள்? இதில் நீங்கள் சொன்ன உபமா னம் எப்படிப் பொருந்தும் ?

சாமிநாத சாஸ்திரி சபாஷ்! நன்றாய்ச் சொன்னப். இப்படிப்பட்ட சர்வமுட்டாளாகிய உனக்கு நான் சொல் வது செவிடன் காதில் சங்கு ஊதுவதைப்போல் இருக்குமே தவிர வேறே சிறிதாவது உபகாரத்தைத் தராது. இப்படிப் பேசிக்கொண் டிருந்தால் காலை ஆறு மணிவரை நீ வீண்பேச்சுகள் பேசிக்கொண்டுதான் இருப்பாய். இப் பொழுதே மணி ஒன்று அடித்தாய்விட்டது. ஏதாவது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/10&oldid=677376" இலிருந்து மீள்விக்கப்பட்டது