பக்கம்:ராஜாம்பாள்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவிந்தனும் கோபாலனும் 99.

கொண்டு அழுதுகொண் டிருந்தேன். அப்பால் இன்ஸ் பெக்டர் மணவாள நாயுடு வந்ததும் நான்தான் கொலே செய்தேனென்று சொல்லி விலங்கு மாட்டி இங்கே கொண்டுவந்து அடைத்துவிட்டார். இதுதான் நடந்த விருத்தாந்தம். -

கோவிந்தன் கோபாலனை இரண்டாந்தரம் முதலி விருந்து மறுபடியும் சொல்லச்சொல்லிக் கேட்டு, பின் வருங் கேள்விகளைக் கேட்டார். - கோவிங் தன்: கோபாலா, உன் அறைக்குள் வைத்த கடிதத்தைக் காணுேம் என்றாயே, உன் அறைக்குள் சாதா ரணமாய் யார் வருவார்கள் ? -

கோபாலன்: சங்கோசப்பட்டுக்கொண்டு நான் யாரி டத்திலும் பேசுவதில்லை யாதலால், வேலைக்காரர். நீங்க லாக நான் சாதாரணமாய்ப் பேசும் ராஜாம்பாளும் லோகசுந்தரியும் சென்னையில் இருக்கும் நடேசனுந்தான் என் அறைக்குள் வருபவர்கள்.

கோவிந்தன். சரி ! இம் மூவரில் யாராவது அன்று உன்னிடம் வரவேண்டிய வேலை இருந்ததா? அல்லது யாராவது வந்துவிட்டுப் போனதாகக் குறி இருந்ததா? அப்போது தோன்றா விட்டாலும் இப்போதாவது யோசனை செய்து சொல்லு . - - - கோபாலன்: ராஜாம்பாள் வருவதற்குச் சாத்திய மில்லாததால் கடிதம் எழுதினுள். ஆகையால் அவள் வந்தே இருக்கமாட்டாள். வந்திருந்தாலும் கடிதத்தை எடுத்துக்கொண்டு போகக் காரணமில்லை. ஆகையால் அவளல்ல என்று நிச்சயமாய்ச் சொல்லலாம். நடேசன் சென்னையிலேயே இருக்கிருன்; காஞ்சீபுரம் வந்திருந்த தாக யாரும் சொல்லவில்லை யாதலால் அவனும் இருக்க மாட்டான். லோகசுந்தரியையும் அன்று காலையில் நான் பார்த் துப் பேசியதால் அவளும் வர ஏதுவில்லே. ஆதலால் காற்றடித்தே போயிருக்கும்.

கோவிந்தன்: நேற்றுக் கடிதம் யாரிடத்தில் கொடுத் தனுப்பிய்ை; அந்த வேலைக்காரன் இப்போது எங்கே?

கோபாலன்: முருகன் என்னும் வேலைக்காரனிடம் அனுப்பினேன். நேற்றுச் சாயங்காலம் அவன் தம்பியி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/103&oldid=684645" இலிருந்து மீள்விக்கப்பட்டது