பக்கம்:ராஜாம்பாள்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விசாரணை 107

ராஜாம்பாள் எல்லாரிடத்திலும் பிரியமாய்ப் பேசு. வதைப்போல் என்னிடமும் பேசுவது வழக்கமாதலால் அவள் குரல் எனக்கு நன்றாய்த் தெரியும். என் தலையை இரண்டு துண்டாக வெட்டிவிட்டாலும், கிழக்கே உதிக்கிற சூரியன் மேற்கே உதித்தாலும் உன்னைக் கல்யாண ஞ் செய்துகொள்ள மாட்டேன்’ என்று ராஜாம்பாள் சொன்னதைக் கேட்டேன். உடனே ஒரு கதவு திறந்து மூடப்பட்டது. சுமார் ஐந்து நிமிஷத்திற்குப் பிறகு குதிரைவண்டி யொன்று விரைவாக அந்த வாசலி லிருந்து ஒடிற்று. அதற்குப் பின்னல் பைசிகிள் வண்டி யேறி யாரோ கொஞ்ச தூரத்தில் பின்தொடரக் கண்டேன். இதுதான் எனக்குத் தெரிந்த விஷயம்.

கோர்ட்டார். இவரை ஏதாவது கேள்வி கேட்க வேண்டுமா?

துரைசாமி ஐயங்கார்: இவரையும் செஷன்ஸ் கோர்ட் டில் கேட்டுக்கொள்ளுகிறேன். -

கோர்ட்டார்: மூன்றாவது சாட்சி நடேச சாஸ்திரிகளைக் கூப்பிடு.

நடேச சாஸ்திரிகள் உயர்ந்த பிளானலிற் செய்த வெள்ளைக் கால்சட்டையும் ஓம் ஸ்பன்னில் செய்த கோட் டும் வெஸ்ட்கோட்டும் மெரினு மேஜோடும் ருஷியத் தோலில் செய்த மேலான பூட்ஸ்களும், ஒரு விரல் கன முள்ள தங்கக் கடிகாரச் சங்கிலி யும், நவரத்தினங் கள் இழைத்த தங்கக் கடிகாரமும், தலையில் பனுரிஸ் தலைக் குட்டையும் அணிந்துகொண் டிருந்தார். மொத்தத்தில் இவர் போட்டிருந்த உடுப்புகளைப்போல் ஐரோப்பிய ரிடங்கூடக் காண்பது கஷ்டமென்றால், இவருடைய உடுப் புகளைக் குறித்து விஸ்தரிப்பானேன்? -

பா. கொக்கு துரை: நடேச சாஸ்திரிகளே, கோபா லனுக்கு விரோதமாகச் சாட்சி சொல்வது உமக்கு, மிகவும் வருத்தத்தைக் கொடுக்கும் என்பது நமக்குத் தெரிந்தாலும், கொலை செய்யப்பட்ட உமது தமக்கை யின் புத்திரியாகிய ராஜாம்பாளைக் கொலை செய்தவர் களைக் கண்டுபிடிப்பதற்காகவும், நீதி ஸ்தலங்களில் பொய்’ சொல்லக்கூடாதா கையாலும் உமக்குத் தெரிந்த விஷயங்கு களே ஒளியாமற் சொல்லவேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/111&oldid=684653" இலிருந்து மீள்விக்கப்பட்டது