பக்கம்:ராஜாம்பாள்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 இராஜாம்பாள்

நடேச சாஸ்திரி: விரோதந்தான். துரைசாமி ஜயங்கார்: என்ன விரோதம்? - நடேச சாஸ்திரி: என்னைப் பார்க்கும்போதே நல்ல பாம்பைக் கண்டவள் நடுங்குவதைப்போல் நடுங்கு வாள். அடிக்கடி என்னேக் குறித்துச் சாமிநாத சாஸ்திரி; வரிடம் கோள் சொல்லுவாள். அதற்காக ஐந்து வருஷங் களுக்கு முன் ஒரு நாள் அவளே அடித்தேன். ‘ பிச்சைத் காரனுக்குச் சோறு போடுவதைப்போல் உனக்கு என் வீட்டுச்சோறு போடுவதால் அல்லவா இப்படி அடித் தாய்?’ என்று சொல்லி, அவள் தகப்பனர் வந்தவுடனே நான் அந்த வீட்டில் இருந்தால் தான் அங்கே இருக்க முடியாது என்றும், அதுமுதல் என் முகத்தில் விழிக்க முடி ய்ாது என்றும் சொன்னுள். சாமிநாத சாஸ்திரிகள் அது முதல் என்னைத் தம் வீட்டில் இருக்கக்கூடாதென்று திட்டப்படுத்திச் சென்னைக்கு அனுப்பிவிட்டார். இதுதான் விரோதம். -

துரைசாமி ஐயங்கார்: ராஜாம்பாள் இறந்துபோன, தால் தங்களுக்கு விசேஷ அதுகூலங்கள் உண்டோ?

நடேச சாஸ்திரி: தாங்கள் கேட்கிறது எனக்குப் புரியவில்லையே? - -

துரைசாமி ஐயங்கார்: சாமிநாத சாஸ்திரி சொத் துக்காரராயிற்றே. ராஜாம்பாள் இறந்துபோனதால் அந்தச் சொத்தெல்லாம் உமக்குத்தானே சேரும்?

நடேச சாஸ்திரி: சாமிநாத சாஸ்திரிகளுக்கு இஷ்ட மிருந்தால் கொடுப்பார்.

துரைசாமி ஐயங்கார்: முன்னலேயே உயில் எழுதி வைத்திருக்கிற சங்கதி தங்களுக்குத் தெரியாதோ? - நடேச சாஸ்திரி: தெரியும். ஆனல் அவருக்கு இஷ்டம் இல்லாவிட்டால் அந்த உயிலே இப்போது ரத்துச் செய்துவிடலாம் அல்லவா?

துரைசாமி ஐயங்கார்: சரி: நேற்றுப் புதன்கிழமை ராத்திரி தாங்கள் எங்கே இருந்தீர்கள் ?

நடேச சாஸ்திரி; ம-ா-ா-ழரீ மகாராஜா சர் இன் சால்வென்ட் கோவிந்த முதலியார் சென்னையிலுள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/118&oldid=684660" இலிருந்து மீள்விக்கப்பட்டது