பக்கம்:ராஜாம்பாள்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| {} இராஜாம்பாள்

டாக்டர் பீலோ, பாலோ’ என்று பில் அனுப்பி ளுன் , நீங்களும் குழந்தையைச் செளக்கியப்படுத் தினுல்தானே பணம் கொடுக்க வேண்டும், அது செத்துப் போயிருக்க ஏன் பணம் கொடுக்கவேண்டும் என்னும் ஞானம் கொஞ்சங்கூட இல்லாமல் முள்ளங் கிப் பத்தைபோல் ஐம்பது ரூபாய் எண்ணிக் கொடுத்து விட்டீர்கள். அப்போது என் வயிற்றெரிச்சல் இவ்வளவு அவ்வளவு என்று சொல்ல முடியாது. குழந்தை செத்த விசனத்தைப் பார்க்கிலும் இந்த விசனம் ஆயிரம் பங்கு அதிகமாயிருந்தது. நீங்கள் அப்பேர்ப்பட் டவர்களுக்கென்றால் நூற்றுக்கணக்காய் மறு பேச்சுப் பேசாமல் கொடுத்துவிடுவீர்கள். நான் ஏதாவது ஒரு காசுக்குச் செலவு சொன்னுல் உங்கள் கண்ணிலிருந்து தண்ணிர் சொட்டுகிறது. நாட்டு வைத்தியளுயிருக்கட் டும், குழந்தை செத்துப் போயிற்றே, நாம் பணம் கேட்கலாமா என்று திரும்பிப் பார்க்குமுன் மாயமாய்ப் பறந்துவிடுவான். போகட்டும். ஒரு குழந்தையைத்தான் உால் அதிகமாய்க் கொடுத்துக் கொன்றுவிட்டேன் என்றீர்கள்; மற்றக் குழந்தைகள் சங்கதி என்ன? -

சாமிநாத சாஸ்திரி : இரண்டாவது குழந்தை லட்சுமிக்கு எந்நேரமும் சொக்காய் போட்டு வைக்க வேண்டுமென்று தலையில் அடித்துக்கொண்டேனே. டஜன் டஜனுய்க் கம்பளிச் சொக்காய்களும் தைத்துக் கொடுத் தேனே, எப்போதாவது சொக்காய் போட்டாயா? ஜோ என்று மழை அடித்துக்கொண் டிருக்கும்போது அவசர மாய் எண்ணெய் தேய்த்துச் சாயங்காலம் ஆறு மணிக்குக் குளிப்பாட்டிய்ை, போகட்டும், ஸ்நானம் பண்ணின உடனே உள்ளே கொண்டுபோய் மார்பை மூடிக் கம்பளிச் சொக்காய் போடு என்றேன். நீ குழந்தைக் குத் தலையைக்கூடச் சரியாய்த் துவட்டாமல் குழந்தை யைக் குளிர்காற்றிலேயே வைத்துவிட்டுத் திருஷ்டி சுத்து வதற்காக உப்பு மிளகாய் எடுக்கப்போய்ை. உக்கிராணச் சாவியைக் காணுமல் கால்மணி நேரம் தேடி எடுத்துவந்து திருஷ்டி சுற்றி ஆரத்தி எடுத்தாய். ஆக அரைமணி நேரமாய்க் குழந்தையைக் குளிர்காற்றில் வைத்திருக்கும் படி செய்தாய். அன்று ராத்திரியே குழந்தைக்குக் காய்ச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/14&oldid=677380" இலிருந்து மீள்விக்கப்பட்டது