பக்கம்:ராஜாம்பாள்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாய்க்கிழவி }45.

போகும்போது கட்டாயமாய் மறுநாளே வருவதாகச் சொல்லிவிட்டுப் போனுள். மறுநாள் ராஜாம்பாள் கொலை செய்யப்பட்டாளென்று பத்திரிகையில் வாசித்த வுடனே அவளால் தடுக்க முடியவில்லையென்று நினைத்து ஒருகால் நடேசனேடு வருவாளென்று எதிர்பார்த்திருந் தேன். நடேசன் அவளைப் பார்க்கவே இல்லையென்று உண்மையைச் சொல்வதால் அவளுக்கு ஏதோ அபாயம் வந்திருக்குமென்று நம்புகிறேன். இதுதான் உண்மை யாய் நடந்த சங்கதிகள். எப்படியாவது அவளைக் கண்டு பிடித்து என்னிடம் சேர்க்கவேண்டியது தங்களைச் சேர்ந்த கடமை. தாங்கள் அப்படிச் செய்தால் நானும் என் மக ளும் எப்போதும் தங்களை மறக்கவே மாட்டோம்.

கோவிந்தன்: காஞ்சீபுரம் 26வ போளுள் என்றாயே; யார் வீட்டில் போய் இறங்குவதாகச் சொன்னுள்? தாய்க்கிழவி என்னிடம் சொல்லவில்லை. கோவிந்தன்: அதற்கு முன்ல்ை தான் காஞ்சீபுரம் வருவதாக யாருக்காவது காகிதம் எழுதினுளா?

தாய்க்கிழவி: காகிதம் எழுதினுள். யாருக்கென்று என்னிடம் சொல்லவில்லை. அவளே எழுதி அவள் கைப் படத் தபாவிற் போட்டாள்.

கோவிந்தன்: அவள் மாமூலாய் எழுதும் பெட்டி எங்கே? - -

தாய்க்கிழவி: இதோ இருக்கிறது பாருங்கள். அதை அவள் திறந்து காண்பித்தாள். பெட்டி பூரா வாய்த் தேடியும் விசேஷமான காகிதம் ஒன்றும் அகப்பட வில்லை. அப்பால் அங்கே இருந்த மை ஒத்தும் காகி தத்தை மாத்திரம் கோவிந்தன் பத்திரமாய் எடுத்து வைத்துக்கொண்டார். இதற்குள்ளாகத் தந்தி ஆபீ. சுக்குப் போன நடேசனும் ஜவாப்புத் தந்தி வந்த வுடனே அதை எடுத்துக்கொண்டு வந்தார். அதில் பின் வருமாறு எழுதியிருந்தது:

---, -

நடேச சாஸ்திரிகளுக்கு, சென்னை. காஞ்சீபுரத்திற்குப் பாலாம்பாள் வந்ததாகத் தெரியவில்லை. அவளைத் தெரிந்த எல்லாரிடமும்

10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/149&oldid=684691" இலிருந்து மீள்விக்கப்பட்டது