பக்கம்:ராஜாம்பாள்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1, 52 இராஜாம்பாள்

மணவாள நாயுடு: விட்டதாகத் தெரியவில்லை. துரைசாமி ஐயங்கார்: கொலே செய்வதற்கு என்ன காரணம் இருந்திருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

மணவாள நாயுடு; கோபாலனுடைய சகிக்கக்கூடாது துர்க்குணங்கள் ராஜாம்பாளுக்குத் தெரிந்திருக்கு மென்றும், அதன் பேரில் அவள் கல்யாணஞ் செய்து கொள்ள மாட்டேனென்று சொல்லியிருப்பாளென்றும், அவளே உயிருடன் விட்டால் வெளியே சொல்லிவிடுவா ளென்னும் எண்ணத்துடன் கோபாலன் கொலை செய். திருப்பானென்றும் நினைக்கிறேன்.

துரைசாமி ஐயங்கார்: கோபாலன் கெட்டவன் என்ற சங்கதி எப்போது ராஜாம்பாளுக்குத் தெரிந் திருக்கலாமென்று நினைக்கிறீர்கள்?

மணவாள நாயுடு; அவள் இறப்பதற்குப் பதினைந்து நாட்களுக்கு முன்னுல் அறிந்திருப்பாளென்று நினைக் கிறேன். -

துரைசாமி ஐயங்கார்: கோபாலன் மாத்திரம் கொலை செய்திருப்பான; கூட எவரையாவது சேர்த்துக்கொண்டு கொலை செய்திருப்பாளு? -

மணவாள நாயுடு: கோபாலனுக்கு வேண்டியவர்கள் எவரையாவது சேர்த்துக்கொண்டு வந்திருக்கலாம்.

துரைசாமி ஐயங்கார்: அவர்கள் எவரென்று கண்டு பிடித்து விட்டீர்களா? -

மணவாள நாயுடு: இன்னும் சரியாய்த் துப்புத் துலங்கவில்லை. கூடிய ஜல்தியில் கண்டு பிடிக்க முடியும். துரைசாமி ஐயங்கார்: கோபாலனிடத்தில் துப்பாக்கி உண்டா?

மணவாள நாயுடு: கோபாலனுக்குத் துப்பாக்கி வைத்துக்கொள்ள லைசென்சு இல்லை. -. .

துரைசாமி ஐயங்கார்: கோபாலனுடைய வீட்டைச் சோதித்தீர்களே; அதில் விஷமாவது, துப்பாக்கியாவது, குண்டுகளாவது அகப்பட்டனவா?

மணவாள நாயுடு: இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/156&oldid=684698" இலிருந்து மீள்விக்கப்பட்டது