பக்கம்:ராஜாம்பாள்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 இராஜாம்பாள்

காவன்ன துரை : ஆம்; அபினித் திராவகம். துரைசாமி ஐயங்கார் : மேற்சொன்ன மூன்றில் ராஜாம்பாள் எதல்ை இறந்திருப்பாள்?

காவன்ஞ துரை: மூன்றில் ஏதாவது ஒன்றே அவளைக் கொல்லப் போதுமானது. .*

துரைசாமி ஐயங்கார் : துப்பாக்கியாற் சுட்டது முன் குல் இருக்குமா? கட்டாரியால் குத்தினது முன்னல் இருக்குமா?

காவன்ன துரை : இரண்டும் ஏககாலத்தில் இருக்கு மென்று நம்புகிருேம். -

துரைசாமி ஐயங்கார் : இவ்விரண்டு வேலையையும் ஒருவன் ஏககாலத்திற் செய்ய முடியுமா?

காவன்ன துரை : ஒருவரால் செய்ய முடியவே முடி யாது இருவருடைய வேலை என்பதற்குச் சிறிதாவது சந்தேகம் கிடையாது. - -

பா. கொக்கு துரை : மிஸ்டர் காவன்ன துப்பாக்கி யின் குண்டு பாய்ந்ததும், கட்டாரியால் குத்தப்பட்டதும் ஏககாலத்தில் இருக்கு மென்று நிச்சயமாய்ச் சொன்னீர் களே, எப்படி?

காவன்கு துரை : துப்பாக்கியின் குண்டு பாய்ந்த உடனேயாவது அல்லது கட்டாரியின் குத்து விழுந்த விநாடியேயாவது பிராணன் போயிருக்குமாதலாலும், பிராணன் போன பிற்பாடு இரண்டில் எந்தக் காயமாவது விழுந்திருந்தால் நன்றாய்த் தெரியுமாதலாலும், இரண்டு. காயங்களும் பிராணன் போவதற்கு முன்னல் ஏற்பட்டவை ஆகையாலும், இரண்டு காயங்களும் ஏககாலத்தில் ஏற்பட் டிருக்க வேண்டுமென்பதைக் குறித்துச் சிறிதும் சந்தேகம் கிடையாது.

இப்படியே சர்ஜன் பால் துரையும் வாக்குமூலம் கொடுத்தார். அப்பால், கைதி பக்கத்தில் சாட்சிகள் இருக்கிரு.ர்களா?’ என்று கேட்க, துரைசாமி ஐயங்கார் சாட்சிகள் இருக்கிரு.ர்கள் என்று சொல்லி முதல் சாட்சி யாகிய சாமிநாத சாஸ்திரிகளை அழைத்தார்.

துரைசாமி ஐயங்கார் : சாஸ்திரிகளே ! ராஜாம். பாள் ஜனவரிமீ 26வ. புதன்கிழமை ராத்திரி கோபாலனைச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/160&oldid=684702" இலிருந்து மீள்விக்கப்பட்டது