பக்கம்:ராஜாம்பாள்.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செஷன்ஸ் கோர்ட்டு i 5%

துரைசாமி ஐயங்கார்: சாமிநாத சாஸ்திரிகளிட மிருந்து ஜனவரி மாதம் டாக்கர் ஷாப்புக்குக் கடிதம் ஏதாவது வந்ததா?

சுப்பு பிள்ளை: ஜனவரிமீ 17வ ஒரு கடிதம் வத்தது. துரைசாமி ஐயங்கார்: அதில் என்ன எழுதியிருந்தது? சுப்பு பிள்ளை: ஜனவரிமீ 19வ. புதன்கிழமை சா காலம் மூன்றரை மணிக்கு வந்து அவர்கள் ஆர்டர் செய்த மோதிரத்தை வாங்கிப் போவதாகச் சாமிநாத சாஸ்திரி கள் எழுதியிருந்தார்கள்.

துரைசாமி ஐயங்கார்: குறிப்பிட்ட நேரத்தில் வந்தார் களா? வந்திருந்தால் சாமிநாத சாஸ்திரிகள் மட்டும் வந் தார்களா? அல்லது கூட யாரையாவது கூட்டிக்கொண்டு வந்தார்களா?

சுப்பு பிள்ளை: சாமிநாத சாஸ்திரிகளும், அவர் புத் திரியாகிய ராஜாம்பாளும் வந்தார்கள்.

துரைசாமி ஐயங்கார்: எத்தனை மணிக்கு வந்தார்கள்? சுப்பு பிள்ளை சரியாய் மூன்றரை மணிக்கு வந்தார் 36 .

துரைசாமி ஐயங்கார்: எப்போது திரும்பிப் போனார் கள்?

r:


இப்

o


ow

சுப்பு பிள்ளை. ஆறு மணிக்குத் திரும்பிப் போனர்கள். துரைசாமி ஐயங்கார்: ஆனல் மூன்றரை மணி முதல் ஆறுமணி வரையில் உங்கள் ஷாப்பில்தான் இருவரும் இருந்தார்களோ?

சுப்பு பிள்ளை.: ஆம்; ஷாப்பிலேயே உட்கார்ந்திருந் தார்கள்,

பா. கொக்கு துரை: சாமிநாத சாஸ்திரிகளுடன் கூட ராஜாம்பாளும் வந்ததாகச் சொன்னீர்களே; கூட வந்தது ராஜாம்பாள்தான் என்று தங்களுக்கு எப்படித் தெரியும்?

சுப்பு பிள்ளை. இப்போது என்னைக் கேட்பது பாரிஸ் டர் கொக்கு துரை என்பது எனக்கு எப்படித் தெரியுமோ, அப்படியே அன்று வந்தது ராஜாம்பாளென்றும் எனக் குத் தெரியும். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/163&oldid=684705" இலிருந்து மீள்விக்கப்பட்டது