பக்கம்:ராஜாம்பாள்.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செஷன்ஸ் கோர்ட்டு 169

எல்லாவற்றிற்கும் மேலாக என் நண்பர் கொக்கு துரையவர்கள் ‘கோ’ என்னும் எழுத்தை ஒரு மூலையில் எழுதப்பட்ட சித்திர வேலை செய்த கைக்குட்டையொன்று. ரத்தந் தோய்ந்து சாம்பலில் மறைக்கப்பட்டிருந்ததென் றும், அது கோபாலனுடையதென்றும், எல்லாச் சாட்சி யங்களுக்கும் மேலாகக் கோபாலன்தான் கொலைசெய்தான் என்பதற்கு அதுவே முக்கிய சாட்சியமென்றும் வற் புறுத்திக் கூறினரே மணவாள நாயுடு ராஜாம்பாள் பெட்டியைச் சோதிக்கையில் கோபாலனுடைய சித்திர வேலைசெய்த அநேகம் கைக்குட்டைகள் அவள் பெட்டியில் இருந்தனவே; அப்படியிருக்கக் கோபாலன்பேரில் இருக்கும் அதிகமாகிய பிரியத்தால் கோபாலனைக் கல்யாணஞ்செய்து கொள்ளப் போகும்போது அவனுடைய கைக்குட்டையை அவள் எடுத்துக்கொண்டு போயிருப்பாள். அவளைக் கொன்றவர்கள் அவளிடம் இருந்த கைக்குட்டையால் தங்கள் கையிலிருந்த ரத்தத்தைத் துடைத்துவிட்டு அதைச் சாம்பலுக்குள் மறைத்து வைத்திருக்கலாம். இதில் என்ன சாட்சியம் இருக்கிறதென்று எனது நண்பர் அவ்வளவு வற்புறுத்திச் சொன்னரென்று எனக்குத் தெரியவில்லை. கனவான்களே! என் நண்பர் பிரமாதமாய் எடுத்துச் சொல்லிய ஒவ்வொரு விஷயத் தையும் கண்டித்து, நான் தங்களுக்குத் திருப்தியாகும் படி சரியான முகாந்தரங்களால் கோபாலன் கொலை செய் திருக்கமாட்டானென்று ருஜூப்படுத்தி விட்டபடியால் தாங்கள் கோபாலன் குற்றவாளியல்லவென்று சொல் வதைத் தவிர வேறுவிதமான அபிப்பிராயத்திற்கு வரு வது கூடாத காரியமென்று நம்புகிறேன். பிரபுக்களே! நான் சொன்ன ஒவ்வொரு விஷயத்தையும் சீர்தூக்கிப் பார்த்தால் நான் நினைக்கிறபடியே தாங்களும் கோபால னைக் குற்றவாளியல்லவென்றே நினைப்பீர்களென்பதிற் கிஞ்சித்தேனும் சந்தேகம் கிடையாது.”

இவ்வாறு சொல்லிவிட்டுத் துரைசாமி ஐயங்கார் உட்கார்ந்துவிட்டார். உடனே பாரிஸ்டர் கொக்கு துரை எழுந்து, தாம் முன் சொன்ன விஷயங்களையே மறுபடியும் வற்புறுத்திக் கூறி, துரைசாமி ஐயங்காரவர்களின் சாதுர்ய மான வார்த்தைகளைக் கேட்டு ஜூரர்கள் ஏமாந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/173&oldid=684715" இலிருந்து மீள்விக்கப்பட்டது