பக்கம்:ராஜாம்பாள்.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 இராஜாம்டாள்

லோகசுந்தரி: கோவிந்தன் பொய் சொல்கிறவன் அல்லவென்று எல்லாரும் சொல்லுகிறார்களே. மேலும் எவரும் வராத என் படுக்கை அறைக்குள் மேலுக்குத் தெரியாத ஒர் ரகசியமான அறையில் என்னைத் தவிர வேறே எவராலும் திறக்க முடியாத ஒரு பெட்டியில் வைத் திருந்த சில முக்கியமாகிய கடிதங்களைக் காணுேம். அவை கள் மாயமாய்ப் போன விதம் எனக்குத் தெரியவில்லை.

நடேச சாஸ்திரி: இவ்வளவு பந்தோபஸ்தாய் வைத் திருந்த கடிதங்களே எவரால் எடுக்க முடியும்? நீயே மறந்து போய் எங்கேயாவது வைத் திருப்பாய். உனக்கு இப் போது இருக்கப்பட்ட காபுராவில் எங்கே வைத்தாயென் பதை அறியாமல் இப்படித் திண்டாடுகிறாய்போல் இருக் கிறது. அதைக் குறித்து இப்போது யோசனை என்னத் திற்கு? -

லோகசுந்தரி: இல்லை, ஒருகால் அவைகள் கோவிந் தன் கையில் அகப்பட்டு விட்டனவோ என்னவோ என்றுதான் சந்தேகித்தேன். - -

நடேச சாஸ்திரி: வெட்டிக் காரியாதிகளைப் பேசிக் கொண்டிருப்பதில் உபயோகமென்ன?

லோகசுந்தரி. ஆனல் எதைக் குறித்துப் பேசவேண்டு மென்கிறீர்கள்? - -

நடேச சாஸ்திரி நமது காரியங்களைக் குறித் துத்தான் பேசவேண்டும். லோகசுந்தரி, இனி என்னைக் கல்யாணஞ் செய்துகொள்வதற்கு யாதொரு ஆட்சேபு மும் இல்லையே! f

லோகசுந்தரி: ஆக்கப் பொறுத்தது ஆறப் பொறுக் காதா? இன்னும் கோபாலனுடைய சங்கதி தீர்மானமாக வில்லையே! கிணற்று ஜலத்தை வெள்ளங் கொண்டு போகுமா? என்றைக்குக் கோபாலனைத் துக்குப் போடு கிறார்களோ அதே நேரத்தில் நாம் கல்யாணஞ் செய்து கொள்வோம். அதற்குக் கொஞ்சமாவது ஆட்சேபம்

உடனே இருவருமாகக் கோர்ட்டுக்குப் போனர்கள். இதே சமயத்தில் சாமிநாத சாஸ்திரிகளும் துரைசாமி ஐயங்காரும் கோபாலன் குற்றவாளி அல்லவென்று கட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/176&oldid=684718" இலிருந்து மீள்விக்கப்பட்டது