பக்கம்:ராஜாம்பாள்.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செஷன்ஸ் கோர்ட்டு 1

சுடவும் கண்டேன். கட்டாரியின் குத்தும், துப்பாக்கி பின் குண்டும் அவள்மேல் விழவே வேரறுந்த மரம்போல் திடீரென்று அவள் கீழே சாய்ந்துவிட்டாள். உடனே அங்கே எரிந்துகொண் டிருந்த விளக்கு நிறுத்தப்பட்டு ஒரே இருட்டாய் இருந்தது. கொஞ்ச நேரத்துக்கு அப்பால் விளக்கு மறுபடியும் கொளுத்தப்பட்டது. அப்போது கட்டாரியால் குத்தினவன் அங்கே இறந்துபோயிருந்த பெண்ணை நெருப்பால் கொளுத்திவிட்டு என்னை அடைத் திருக்கும் அறையின் கதவைத் திறந்து நான் கூச்சல் போட்டால் உடனே குத்திக் கொன்றுபோடுவதாகச் சொல்லி என்னை மோட்டார் வண்டியில் ஏறும்படி செய்த தன்றி, கத்தியையும் காண்பித்துப் பயமுறுத்தினதனல், நான் பேசாமல் மெளனமாயிருந்தேன். சுமார் ஒரு மணி நேரம் மோட்டார் வண்டியில் பிரயாணஞ் செய்த பிற்பாடு வண்டி எனக்குத் தெரியாத ஒரு சந்தில் நின்றது. என்னே வண்டியிலிருந்து இறங்கச் சொல்லிப் பூமிக்குள் இருக்கும் ஒர் அறையில் போட்டு மூடிவிட்டார்கள். அது முதல் இன்று வரையில் வேளைக்கு வேளை ரொட்டியும் பாலும் மாத் திரம் கொடுத்து வந்தார்கள். நேற்று ராத்திரிப் பெய்த பெரிய மழையினல் என்னே அடைத்திருந்த அறையில் நிமிஷத்திற்கு நிமிஷம் தண்ணிர் பெருகிக் கழுத்து வரைக் கும் தண்ணிர் வந்துவிட்டது. என்னுல் ஆன வரையில் சத்தம் போட்டுப் பார்த்தும் எவரும் ஏனென்று கேட்க வில்லை. தண்ணிரில் மூழ்கிச் சாகவேண்டுமென்ற பிராப் தம் இருக்கிறதுபோல் இருக்கிறது என்று எண்ணிக் கட வுளைத் தியானித்துக்கொண்டே இருந்தேன். நிமிஷத் துக்கு நிமிஷம் தண்ணிர் மேலே ஏறி மூச்சு விட முடியா மல் பிரக்ஞை தப்பிப் போய்விட்டது. அப்பால் கண் விழித்துப் பார்க்கையில் மேலெல்லாம் ரத்தம் ஒழுகிக் கொண்டிருக்கும் இப் புண்ணிய புருஷர் (கோவிந்தன்) என்னை மேலே தூக்கிப் பிராணன் வருவதற்கு உண்டாகிய ஏற்பாடுகள் செய்துகொண் டிருக்கக் கண்டேன். மெது வாகக் கண்விழித்துப் பார்த்து நான் உயிருடன் இருக் கிறேனே என்று அவரைக் கேட்டதில் அவர் உயிருடன், தான் இருக்கிறேனென்றும், எனதுஅந்தரங்கப் பிரியனுகிய, கோபாலன் என்னைக் கொலை செய்ததாகக் குற்றஞ் சாட்

12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/181&oldid=684723" இலிருந்து மீள்விக்கப்பட்டது