பக்கம்:ராஜாம்பாள்.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i 30 இராஜாம்பாள்

உடனே நியாயாதிபதி புன்சிரிப்புச் சிரித்துக் கொண்டே, கோபாலன் குற்றவாளியா? அல்லது குற்ற வாளி அல்லவா?’ என்று ஜூரர்களைக் கேட்க அவர்கள், கோபாலன் குற்றவாளி யல்லவென்று சொன்னதன்றிக் கோபாலனே ப்போல் யோக்கியன் அகப்படுவது மகா துர்லப மென்றும் சொன்குர்கள். நியாயாதிபதியும் ஜூரர்கள் சொன்னபடியே சொன்னவுடனே, கோபாலனும் இரா ஜாம்பாளும் வண்டி ஏறி வீட்டிற்குப் போய்விட்டார்கள். இறந்து போனதாக எண்ணியிருந்த தன் ஏக புத்திரி உயி ருடன் இருப்பதாக அப்போதுதான் தெரிந்ததால் அவ ளுடன் பேசச் சாமிநாத சாஸ்திரி அதிக ஆசைப்பட்டாலும் இராஜாம்பாளும் கோபாலனும் அதிகக் கஷ்டப்பட்டவர் களாதலால் அவர்கள் இஷ்டப்படியே ஒருவரை யொருவர் கேட்கவேண்டிய சமாசாரங்களைக் கேட்டுச் சந்தோஷமாக இருக்கட்டுமென்று நினைத்துக்கொண்டு தாமும் கூடப் போகாமல் கோர்ட்டிலேயே இருந்தார். நியாயாதிபதி எழுத்திருக்குமுன் வக்கீல் துரைசாமி ஐயங்கார் தப்புச் சாட்சி சொன்னதற்காகச் சாமி நாயுடுவை மறுபடியும் விசாரிக்க வேண்டுமென்று உத்தரவு கேட்டார். அப்படியே நியாயாதிபதி யவர்கள் அநுமதி கொடுக்கச் சாமிநாயுடு கூப்பிடப்பட்டார். -

துரைசாமி ஐயங்கார்: சாமிநாயுடவர்களே! தாங் கள் உலகளந்த பெருமாள் கோவில் தெரு, 25-ம் நெம்பர்

 வீட்டில் ஜனவரி 26வ. ராத்திரி ராஜாம்பாள் என்ன சொல்லக் கேட்டேன் என்றீர்கள்?

சாமி நாயுடு: என் தலையை இரண்டு துண்டாக வெட்டி விட்டாலும் கிழக்கே உதிக்கிற சூரியன் மேற்கே உதித்தாலும் உன்னேக் கல்யாணஞ் செய்துகொள்ள மாட்டேன்’ என்று சொல்லக் கேட்டேன் என்றேன்.

துரைசாமி ஐயங்கார்: இப்போது ராஜாம்பாள் என்ன சொன்னதாகச் சொன்னுள் ? -

சாமி நாயுடு: என் தலையை இரண்டு துண்டாக வெட்டிவிட்டாலும் கிழக்கே உதிக்கிற சூரியன் மேற்கே தித்தாலும் கோபாலனத் தவிர வேறே யாரையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/184&oldid=684726" இலிருந்து மீள்விக்கப்பட்டது