பக்கம்:ராஜாம்பாள்.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 இராஜாம்பாள்

கொண்டு போய் ருக்மிணி வீட்டில் மறைந்திருக்கும் படி அவனிடம் சொன்னதாகவும் அப்படி அவன் வெளியே வாராமல் இருக்கும் ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொரு ரூபாய் வீதம் வாரத்திற்கு ஒரு முறை ஏழு ரூபாய் அனுப்புவதாகவும், அவள் சொன்ன பிற்பாடுதான் வெளியே வரவேண்டுமென்று சொல்லியிருப்பதாகவும் சொன்ஞன். -

நான் அவனைக் கண்டு கேட்ட விவரத்தை லோக சுத்தரியிடம் சொல்லாமல் அவள் வாரத்திற்கு ஒரு தரம் கொடுக்கும் ரூபாய் ஏழையும் வாங்கிக்கொண் டிருக்கும்படி சொன்னதன்றி நான் கண்டு கேட்ட விவரங்களை அவளிடம் சொன்னல் அவனையும் கொலைக் கேசில் சம்பந்தப்படுத்தி ஜெயிலில் அடைத்துவிடுவே னென்று பயமுறுத்திவிட்டு வந்தேன். மறுநாள் காலை வில் குடுகுடுப்பை வேஷம் போட்டு லோகசுந்தரியின் படுக்கையறையைச் சோதித்து, அதிலிருந்து கோபால ளிைடமிருந்து காணுமற் போன கடிதத்தையும், நடேச சாஸ்திரிகளிடமிருந்து லோக சுந்தரிக்கு வந்த தந்தி ஒன்றையும் கடிதம் ஒன்றையும் தேடி எடுத்தேன். நடேசனுடைய தந்தியால் லோகசுந்தரியும் நடேசனும் முன்னுல் சந்தித்ததாகவும், நடேசனிடமிருந்து வந்த கடிதத்தால் அவர்கள் இருவரும் சதியாலோசனை செய் திருப்பதாகவும், இதை நிறைவேற்ற நடேசன் கொலே தடந்த அன்று ராத்திரி பன்னிரண்டு மணிக்குக் காஞ்சீ புரம் வந்ததாகவும் ஏற்பட்டது. அப்பால் சென்னைக்குப் போய் நடேசன் விருந்துக்குப் போயிருந்த இன்சால் வென்ட் கோவிந்த முதலியார் வீட்டில் விசாரித்ததில் விருந்துக்கு வந்தவர்களுள் நடேச சாஸ்திரிகள்தாம் மஞ்சள் ரோஜாப் புஷ்பம் வைத்துக்கொண்டு வந்தா ரென்றும், அன்று ராத்திரி. பத்தரை மணி வரையில் அங்கே இருந்தாரென்றும் தெரிய வந்தது. மோட்டார் வண்டி ஏறி வருகிறேன்’ என்று லோகசுந்தரிக்கு நடேச சாஸ்திரிகள் எழுதியிருந்ததால் சென்னையில் மோட் டார் வண்டி வைத் திருக்கும் ஒவ்வொருவரையும் விசா ரணை செய்ததில் குடிக்கூலிக்கு மோட்டார்வண்டி அகாடுக்கும் ஒருவரிடமிருந்து நடேச சாஸ்திரி வண்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/192&oldid=684734" இலிருந்து மீள்விக்கப்பட்டது