பக்கம்:ராஜாம்பாள்.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#92 இராஜாம்பாள்

பத்திரிக்குக் கொண்டுபோய் டாக்டர்களிடம் கேட்டதில் அவளுக்கு விழுந்திருக்கும் காயம் மிகவும் கொடுரமாகிய தால் அவளுக்குப் பிரக்ஞை வருவதே மகா கஷ்டமென்றும் ஒருகால் பிரக்ஞை வந்தாலும், அப்படிப் பிரக்ஞை வரக் குறைந்தது ஒரு வாரம் பிடிக்குமென்றும் சொன்னர்கள்.

ஆகையால் அவள் மூலமாய் ராஜாம்பாளே ஒளித்து வைத்திருக்கும் இடத்தைக் காண்பது முடியாதென்று கண்டுகொண்டு பிரசிடென்சி மாஜிஸ்டிரேட்டிடம் போய்ச் சகலமும் சொல்லி நடேச சாஸ்திரிகள் பேரிலும், லோக சுந்தரியின் பேரிலும், ஷோக் நரசிம்மலு நாயுடுவின் பேரிலும் பாலாம்பாளின் கொலேக்காக வாரன்டும், கொள்ளிக்கண்ணன் பேரிலும் அமாவாசையின்பேரிலும் ராஜாம்பாளைப் பலவந்தப்படுத்தி ஒளித்து வைத் திருப்பதற்காக வாரன்டும் பெற்றுக்கொண்டு வரும்படி என் ஆட்களில் ஒருவனே அனுப்பிவிட்டு நான் நரசிம் மலு நாயுடு வீட்டண்டை போய்க் காத்திருந்தேன். நான் போன கொஞ்ச நேரத்திற்கப்பால் கொள்ளிக்கண்ணனும் அமாவாசையும் வந்து கிளி கூப்பிடுவதைப்போல் நாலு அல்லது ஐந்து தரம் கூவிஞர்கள். உடனே நரசிம்மலு நாயுடு எழுந்துவந்து என்ன சங்கதியென்று கேட்டார். அவர்கள் நடந்த விருத்தாந்தங்களைச் சொல்லித் தாங்கள் உடனே எங்கேயாவது ஓடிப் போய்விடவேண்டுமென்று சொன்னதன்னியில் இனி ராஜாம்பாளுக்கு ரொட்டி, பால் முதலாகியது கொடுப்பதை நரசிம்மலுநாயுடு செய்ய வேண்டுமே தவிர அவர்களால் முடியாதென்றும் சொன் ஞர்கள். நாயுடு கூடியவரையில் அவர்களைப் பயப்படா மல் இருக்கும்படி சொல்வியும் கேளாததால் இனி ஆக வேண்டிய காரியாதிகளைத் தாமே பார்த்துக்கொள்ளு வதாகச் சொல்வி அவர்களுக்கு ஐம்பது ரூபாய் கொடுத்து அனுப்பிவிட்டார். நரசிம்மலு நாயுடு எந்த நேரத்தில் எழுந்து ராஜாம்பாள் இருக்கும் இட்ம் போவாரோ என்ற சங்கதி எனக்குத் தெரியாதாதலால் கொஞ்சங்கூடக் கண் மூடாமல் நேற்று ராத்திரி பூராவாய் விழித்துக்கொண்டு அதிக ஜாக்கிரதையாயிருந்தேன். இன்று காலையில் விடிந்த பிற்பாடு 12-மணி வரையில் நாயுடு வெளியே வரவில்லை. அப்பால் ஒரு சிறு மூட்டையைக் காகிதத்தில் சுற்றிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/196&oldid=684738" இலிருந்து மீள்விக்கப்பட்டது