பக்கம்:ராஜாம்பாள்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாஸ்திரியின் உயில் 39

கனகவல்லி: நீங்கள் சொல்வது உண்மையாளுல் உமது சொத்தில் பாதி அவனுக்கென்று உயில் எழுதி வையுங்கள், பார்ப்போம். -

சாமிநாத சாஸ்திரி: பாதிச் சொத்தை அவனுக்கு வாங்கிக் கொடுக்க வேண்டுமென்ற எண்ணத்தால் நீ நாக் கைப் பிடுங்கிக்கொள்கிறேனென்றும் கல்யாணம் செய்து கொடு என்றும் இவ்வளவு நேரம் வம்பு பேசினய்போல் இருக்கிறது. நீ சொன்னலும் சொல்லாவிட்டாலும் நான் அப்படியே செய்ய உத்தேசித் திருந்தேன். -

கனகவல்லி. அப்படி உத்தேசித்திருந்தால் பின் வக்கீலைக் கூப்பிட்டு உயில் எழுதாமல் ஏன் தாமதிக்கிறீர் கள்? மனிதர்கள் காயம் ஒரு நிச்சயமா? நேற்றுச் சங்கர சுப்பையர் அகத்துக்கு வந்தாராம், சாப்பிட்டாராம்: ‘ குட்டி ஜலம் கொண்டுவா’ என்றாராம். சொம்பு தேய்த்து ஜலம் கொண்டுபோவதற்குள் ஐயர் பரமபத மடைந்தார். ஏதோ செய்கிறேனென்று சொல்வதை ஜல் தியாய்ச் செய்துவைத்து விடுங்கள்.

சாமிநாத சாஸ்திரி வக்கீலேப் புறப்பட்டு வரும்படி காலையில் தந்தி கொடுப்பதாய்ச் சொல்லிவிட்டுக் காலை நாலு மணிக்குப் படுத்துக்கொண்டார்.

2. சாஸ்திரியின் உயில்

பொழுது விடிந்ததும் கனகவல்லி எழுந்து வக்கீல் துரைசாமி ஐயங்காருக்குத் தந்தி அடிப்பதற்கு ஞாபகப் படுத்தி, தந்தி அடிக்கும்படி செய்தாள். பாதிச் சொத்தை நடேசனுக்கு எழுதிவைப்பதற்கு வக்கீல் துரைசாமி ஐயங் கார் கட்டாயமாய் ஆட்சேபம் செய்வாரென்று கணக வல்லிக்குத் தெரியுமாதலால், அவர் அப்படி ஆட்சேபித் தாலும் கட்டாயமாய்ச் சொன்ன சொல் தட்டக்கூடா தென்றும் வாக்களித்த பிரகாரமே நடக்கவேண்டு மென் தும் சாமிநாத சாஸ்திரியிடம் உறுதிமொழி பெற்றுக் கொண்டாள். அன்றியும் வக்கீல் ஐயங்காரைச் சந்தோ அப்படுத்துவதற்காக அவருக்கு விசேஷமான விருந்து செய்வதற்கு மத்தியான்னம் ஒருமணி முதல் ஆரம்பித்துச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/23&oldid=677389" இலிருந்து மீள்விக்கப்பட்டது