பக்கம்:ராஜாம்பாள்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 இராஜாம்பாள்

சேர்ந்தார். பாவம்: அவருக்கு ஐம்பத்து நாலு வயசாகி விட்டது. அவருக்கு நான்கு புத்திரர்களும் இரண்டு புத்திரிகளும் பிறந்து, எல்லோருக்கும் கல்யாணமாகி இப் போது பதினுலு பேரன் பேத்திகள் இருக்கிரு.ர்கள். இப்படி இருக்கும்போது அரசன் என்றும், ஏழை என்றும் வித்தியாசம் பாராட்டாத எமதர் மராஜன் தன் துரதர் களை அனுப்பி நீலமேக சாஸ்திரிகளின் பெண் சாதியை மண்ணுலகு விட்டு விண்ணுலகிற்குக் கொண்டுபோய் விட்டான். தம்முடைய பேருக்கிணங்க, சாஸ்திரிகள் நீலமேக வர்ணமாகவே இருப்பார், நாலரை அடி உயரம், ஐந்தடி சுற்றளவுள்ளவர், அநேக உத்தியோகஸ்தர் களைப்போல் உட்கார்ந்து எழுந்திருப்பதே சாஸ்திரி களுக்கு மிகவும் கஷ்டம். ~.

இரண்டு பேர் சேவகர்கள் போயும் இன்னும் ராமண் ணுவைக் கொண்டுவரவில்லையே என்று இன்னொரு சேவ கனே அனுப்பி, ‘ எங்கிருந்தாலும் உடனே கொண்டுவா’ என்று சொல்லி நீலமேக சாஸ்திரிகள் அனுப்பினர். நல்ல வேளையாய்ச் சேவகன் தெருவிற்கு ப் போவதற்குள் ராமண்ணுவைக் கொண்டுவந்துவிட்டார்கள். அவரைப் பார்த்தவுடனே தம் குலதெய்வத்தைப் பார்த்தவர் போல் எழுந்து, ராமண்ணுவைச் சோபாவில் உட்கார வைத்துத் தாமும் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டார். சேவகர்களைக் கூப்பிட்டு, நான் உங்களைக் கூப்பிடுகிற வரையில் நீங்கள் உள்ளே வராமல் இருக்கிறதுந் தவிர, எங்கிருந்து அவசரமாகிய தந்தி வந்தாலும், கொலை நடந்ததென்று யார் வந்து சொன்னலும், என்னைப் பார்க்க, கலெக்டரல்ல, கவர்னர்-ஜெனரல் துரை வந்தா லும் அவர்களிடம் நான் வெளியே போயிருக்கிறே னென்று சொல்லவேண்டியது. எந்தக் காரணத்தை உத்தேசித்தும் என்னைத் தொந்தரவு செய்யக்கூடாது’ என்று கடுரமான உத்தரவளித்து அவர்களை முன்பக்கத் தில் பாரா இருக்கச் சொல்லிவிட்டு ராமண்ணுவிடம் பேச ஆரம்பித்தார். இதற்குள்ளாக ராமண்ணுவுக்கு இருந்த பய்மெல்லாந் தீர்ந்து, நம்மை ஏதோ காரியமாக அழைத் திருக்கிருன்; இவன் ஊரில் லஞ்சம் வாங்கினல் நான் இவனிடம் பலமாய் வாங்காமல் விடப்போகிறதில்லை;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/32&oldid=677398" இலிருந்து மீள்விக்கப்பட்டது