பக்கம்:ராஜாம்பாள்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 இராஜாம்பாள்

ராமண்ணுவிடம் ராஜாம்பாளைக் கோபாலனுக்குக் கல்யாணஞ் செய்துகொடுப்பதாக உத்தேசித்து ஜாத கம் பார்ப்பதாகவும் ஜோஸ்யர்கள் இரண்டு மூன்று மணிநேரம் ஜாதகங்களைப் பார்த்துவிட்டுப் பல தடவை சொல்லும்படி கேட்டும் ஒன்றுஞ் சொல்லாமல் வாய் மூடிக்கொண் டிருக்கிற படியால், ராமண்ணுவையும் ஜாதகங்களைப் பார்த்து உண்மை தெரியப்படுத்த வேண்டுமென்று வேண்டிக்கொண்டார். ராமண்ணு தமக்கு ஜாதகங்கள் பார்ப்பதில் அவ்வளவு திறமையில்லையென் றும், இருந்தாலும் தமக்குத் தெரிந்தவரையில் பார்த்துச் சொல்லுவதாகவும் சொல்லிவிட்டு, ஜாதகங்களை ஒரு மணி நேரம் வரையில் பார்த்துவிட்டு, ஈசுவரச் செயல் அப்படி இருக்கும்போது நம்மால் என்ன செய்ய முடியும்?’’ என்று சொல்லிக்கொண்டே ஜாதகங்களைக் கீழே வைத்து விட்டு மெளனமாயிருந்தார். -

சாமிநாத சாஸ்திரி; ஏன் ராமண்ணு! நீரும் மெளன மாயிருக்கிறீரே? உள்ளதைச் சொல்லுமே; இதில் என்ன பயம்?

ராமண்ணு: இந்த ராஜதானியில் நிகரில்லாத இரண்டு ஜோஸ்யர்கள் ஜாதகங்களைப் பார்த்துவிட்டுச் சும்மா இருக்கும்போது, நீர் என்னைக் கேட்பது மரியாதையோ? அவர்கள் வாயால்தான் வரட்டுமே. பாவம்! கோபாலன் மிகவும் நல்ல ைபயன். அவனுக்குச் சமானமாய் இந்த ஊரிலேயே யாரையும் சொல்லக்கூடாது. ராஜாம் பாளுக்கு அவனையே கல்யாணஞ் செய்துகொள்ளப் பிரியம்போல் இருக்கிறது. கோபாலனுக்கும் ராஜத் தின் பேரில் வெகு பிரியம். ஆனல் ஈசுவரக் கருணை மாத்திரஞ் சற்றுக் குறைவாக இருக்கிறதுபோல் தோற்று கிறது. - சாமிநாத சாஸ்திரி. ஒய் கிருஷ்ணமாசாரி! ஏன் மெளனமாக இருக்கிறீர்? உள்ளதைச் சொல்லுமே. - கிருஷ்ணமாசாரி: இல்லை; சொல்லவேண்டியதுதான். ஆனலும் சுப் பிரமணிய சாஸ்திரிகள் வாயால் வந்து விட்டால் நல்லது.

சுப்பிரமணிய சாஸ்திரி; ஒய் கிருஷ்ணமாசாரியரே, என்ன உமக்கு ஒன்றும் தெரியவில்லேபோல் இருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/36&oldid=677402" இலிருந்து மீள்விக்கப்பட்டது