பக்கம்:ராஜாம்பாள்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போலீஸ் அகியாயங்கள் 49

அக்கொடிய துஷ்டன் அவரைப் பார்த்து, ஏங் காணும் பிராம்மணு ஊரிலுள்ள திருட்டுச் சொத்தை யெல்லாம் உருக்கும்போது எவ்வளவு சந்தோஷமாயிருந் தது! இப்போது எப்படி இருக்கிறது பார்த்தாயா?” என்றான்.

அதற்குச் சாமிநாத சாஸ்திரி, அப்பா, நான் ஒரு பாவமும் அறியேன்” என்றார்.

உடனே அத்துஷ்டனுக்குக் கோபம் வந்து, ‘ஒன்றும் அறியாயா?’ என்று இரு கன்னமும் புடைக்க நன்றாய் நாலைந்து அறை அறைந்துவிட்டு, மூத்திரத்தைப் பிடித் துத் தாகத்திற்குக் குடி’ என்று சொல்லிவிட்டுப் போய் விட்டான்.

“அவர்கள் பேசினபடி முதல் பூஜை ஆகியிருக்கிறது. ஜகதீசா இன்னும் இவர்கள் செய்யும் இம்சையைப் பொறுக்க எனக்கோ சக்தி இல்லை. என்னைக் கொன்று விட்டாலும் பரவாயில்லை. உயிரோடு வைத்துக்கொண்டு இப்படி இம்சிக்கிறார்களே’ என்று சாமிநாத சாஸ்திரி எண்ணிக்கொண் டிருந்தார். -

கொஞ்ச நேரத்திற்கப்பால் அவரை அடைத்திருக்கும் கதவு மறுபடியும் திறக்கப்பட்டது. இப்போது என்ன ஆபத்து இருக்கிறதோ என்று சாமிநாத சாஸ்திரி எண்ணி ஞர். கதவு திறந்ததும் ராமண்ணுவை உள்ளே தள்ளி மறுபடியும் கதவு மூடப்பட்டது. ராமண்ணுவைக் கண்ட தும் சாமிநாத சாஸ்திரிக்குச் சற்று விசனம் தீர்ந்து, ஏது ராமண்ணு,உம்மையும் என்ளுேடு அடைத்துவிட்டார்களே! உம்மையும் ஏதாவது குற்றஞ்செய்ததாகக் கொண்டு வந்து விட்டார்களோ?’ என்றார், -

ராமண்ணு: நீங்கள் ஜலம் கேட்டதாகவும் அதற்குக் கொடுக்கமாட்டேனென்று சேவகன் போய்விட்டதாகவும் வெளியே பேசிக்கொண்டார்கள். இதைக் கேட்டதும் கலிகாலக் கர்ணனுகிய உங்களுக்கும் இப்பேர்ப்பட்ட இம்சை வந்துவிட்டதே என்ற வருத்தத்துடன் உம்மை வெளியே கொண்டுபோகாவிட்டாலும் எப்படியாவது உங்களுக்கு ஜலம் கொண்டுவந்து கொடுக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் ஒரு சீசாவில் தண்ணீர் நிரப்பி மடியில் வைத்து யாருக்குந் தெரியாமல் கட்டிக் கொண்டு

4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/53&oldid=677419" இலிருந்து மீள்விக்கப்பட்டது