பக்கம்:ராஜாம்பாள்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போலீஸ் அகியாயங்கள் 5

பனம் என்ற சங்கதியே உங்களுடைய விஷயத்தில் எடுக்கக்கூடாதென்றார். . -

சாமிநாத சாஸ்திரி. ஆனல் கட்டாயமாகத் தண் டித்து விட வேண்டுமென்கிறார்போல் இருக்கிறது.

ராமண்ணு: இல்லே, இல்லை. அவர் சொல்லுகிறபடி ஒரு விஷயத்தில் நீர் நடந்து கொள்வதாயிருந்தால் இப் போதே விட்டுவிட ஏற்பாடு செய்கிறேன் என்கிரு.ர்.

சாமிநாத சாஸ்திரி: எந்த விஷயத்தில்? ராமண்ணு: அதுதான் எனக்குச் சொல்லச் சற்று யோசனையாயிருக்கிறது. உங்களைத் தவிர இன்னொருவரா ஞல், தேடப்போன கொடி காலில் சுற்றிக்கொண்டதென் றும், கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்ததென்றும் யோசித்துக்கொண்டு சந்தோஷமாய் இப்பேர்ப்பட்ட சம்பந்தம் நமக்கு அகப்பட்டதேயென்று சாமியைப் பிரார்த்திப்பார்கள். ஆளுல் உங்கள் எண்ணம் எப் படியோ? --- .

சாமிநாத சாஸ்திரி. நீர் சொல்லுவது ஒன்றும் அர்த்தமாகவில்லேயே காலும் இல்லாமல் தலையும் இல் லாமற் சொல்லுகிறீரே. விவரமாய்ச் சொன்னுலல்லவோ தெரியும்?

ராமண்ணு சப் மாஜிஸ்டிரேட்டார் தாமாகவே பத்து லட்சத்திற்குமேல் சம்பாத்தியஞ் செய்திருக்கிறார், இன்னும் எத்தனையோ லட்சம் சம்பாத்தியஞ் செய்வார். வாய்ச்சொல்லால் ஒருவனேச் சிறைச்சாலைக்கு அனுப்பவும் விடுதலை செய்யவும் சக்தியுடைய சப் மாஜிஸ்டிரேட் வேலையில் இருக்கிறார். அவருக்கு வயசு அதிகம் ஆகி. விடிவில்லை. சுமார் ஐம்பது அல்லது ஐம்பத்துநாலுக்கு மேல் இருக்காது. ஐம்பது வயதென்றுதான் யாராவது மதிப்பார்களா? ஒருகாலும் மதிக்கமாட்டார்கள். நாலு: தினங்களுக்கு முன் ஜில்லாக் கலெக்டர் துரையவர்கள் பழைய ஜோடுகளை ரிப்பேர் செய்துகொண்டு வந்தவர்; வண்டியிலேயே வைத்துவிட்டு இறங்கிப் பங்களாவுக்குள் போளுராம். துரையவர்களைப் பார்க்கப்போயிருந்த் சப் மாஜிஸ்டிரேட் சாஸ்திரி உடனே அந்தப் பழைய ஜோடுகளைக் கையில் தூக்கிக்கொண்டு துரைக்குப் பின் ேைலயே ஒடிஞராம். துரையவர்கள் ஜோடுகளைக் கிழே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/55&oldid=677421" இலிருந்து மீள்விக்கப்பட்டது