பக்கம்:ராஜாம்பாள்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 இராஜாம்பாள்

வருக்கு உபகாரம் செய்தால் அது அபகாரமாகவே முடி கிறது. என் வாயை வைத்துக்கொண்டு சும்மா இருந் தால் இவ்வளவு வருமா? தன்னைக் கொல்ல வந்த பக வையுங் கொல்லலாமென்று மனுதர்ம சாஸ்திரத்திற் சொல்லவில்லையா? இவ்வளவு உங்களுக்குத் தீங்குசெய் தும் அவனுக்கு நன்மை செய்யவேண்டும் என்கிறீர்கள். உங்களைக் கடிக்க வரும் பாம்பை வழியே போகும் ஒருவன், தன்னக் கடித்துவிடுமே என்ற பயங்கூட இல்லாமல் அடித்தால், அதை அடிக்காதே, என்னேக் கடிக்கட்டும்: என்று சொல்வதற்குச் சமானமாயிருக்கிறதே, சபாஷ்:

சாமிநாத சாஸ்திரி. ஆனல் என்ன செய்யச் சொல் லுகிறீர்? . ராமண்ணு: இன்னுஞ் சொல்லுகிறதில்தான இருக் கிறது? கல்யாணஞ்செய்து கொடுக்கிறேனென்று இன்ஸ் பெக்டர் மணவாள நாயுடுவையும் சப் மாஜிஸ்டிரேட் சாஸ்திரிகளையும் என்னையும் வைத்துக்கொண்டு வாக்குக் கொடுக்க வேண்டியதுதான். .

சாமிநாத சாஸ்திரி. ஆனல் நீர் சொன்னதெல்லாம் உண்மைதானே? கல்யாணஞ்செய்து கொடுக்கும்படி வராதே! உண்மையாய்ச் சொல்லும்.

ராமண்ணு: உம்மிடத்தில் எப்போதாவது நான் பொய் சொல்லியிருக்கிறேனே ? எங்கள் அப்பாமேல் ஆணே, வாஸ்தவந்தான்.

சாமிநாத சாஸ்திரி சப் மாஜிஸ்டிரேட்டாரையும் இன்ஸ்பெக்டரையும் அழைத்து வந்தால் நீர் சொன்ன பிரகாரம் வாக்களிக்கிறேன். - .

ராமண்ணு: இப்போது நானும் உம்மைப்போல் கைதிதானே? அவர்கள் கதவைத் திறக்கட்டும். - - இதையெல்லாம் பக்கத்திலிருந்து கேட்டுக்கொண் டிருந்த சப் மாஜிஸ்டிரேட்டாரும், இன்ஸ்பெக்டரும் ராமண்ணுவின் சாதுரியத்திற்கு மெச்சி, இக்காரியம் இன் ைெருவரால் முடிக்க முடியாதென்று பேசிக்கொண்டார். கள். கால்மணி நேரத்திற்கு அப்பால் கதவு திறக்கப்பட்டு இன்ஸ்பெக்டர் மணவாள நாயுடு உள்ளே வந்து சப் மாஜிஸ்டிரேட்டார் அபிப்பிராயத்தைச் சாமிநாத சாஸ் திரிகளுக்குத் தெரிவிக்க வந்தேனென்றர். உடனே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/58&oldid=677424" இலிருந்து மீள்விக்கப்பட்டது