பக்கம்:ராஜாம்பாள்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 இராஜாம்பாள்

கொடுப்பதாக வாக்களித்தால் உடனே விட்டுவிடுவார் களென்றும் ராமண்ணு சொன்னன். நான் அதற்குக் சிறிதும் இடங்கொடுக்கவில்லை. அப்பால், நான் ஒப்புக் கொள்ளாவிட்டால் கோபாலனையும் திருட்டுக் கேசில் சம்பந்தப்படுத்த உத்தேசித்திருப்பதாகவும், அவனையும் சிறையில் அடைத்து விடுவதாகவுஞ் சொல்லி, நான் வாக்குக் கொடுத்துவிட்டு வெளியே போய்விட்டால் இன்னும் இரண்டொரு தினத்தில் இந்தச் சப் மாஜிஸ் டிரேட்டை யாரோ கொலைசெய்யக் காத்துக்கொண் டிருக் கிருனென்றும், ஆகையால் நான் வாக்களிப்பதால் உடனே விடுதலே யடைவதன்றிக் கல்யாணஞ் செய்து கொடுக்கவேண்டிய பிரமேயமும் இல்லை என்பதாகவும் ராமண்ணு சொன்னன். நேற்று ராத்திரி இருந்த நிலையில் எனக்கு எப்போதும் மாமூலாயிருக்கும் நன்மை தீமை என்று பகுத்தறியும் சக்தி சற்று மட்டுப்பட்டிருந்தது. அதல்ை இப்படி இருக்குமா இருக்காதா என்று யோசனை செய்யாமல் அவர்கள் கேட்டபடி வாக்களித்துவிட்டு இப்போது ஆந்தையைப்போல் விழித்துக்கொண் டிருக் கிறேன். இப்போது யோசித்துப் பார்க்கையில், ராமண்ணு ஆதிமுதலே இந்தச் சப் மாஜிஸ்டிரேட் வார்த்தையைக் கேட்டுக்கொண்டு அவனுக்கு அதுசரணையாய் நடந்திருப்ப தால் அவனைக் கொலைசெய்ய ஆள் தயாராயிருக்கிரு னென்று அவன் சொன்னது பொய்யென்று தெளிவாகத் தோற்றுகிறது. நான் சொன்ன வாக்கும் தட்டக்கூடாது. காமக் குரோத லோப மோக மத மாச்சரியம் என்னும் துர்க்குணங்களே திரண்டு உருவாக வந்திருக்கும் அந்தக் கிழட்டுப் பிணத்திற்கு என் கண்மணியாகிய உன்னைக் கல்யாணம் செய்துகொடுக்க என் மனம் எப்படித் துணியும்? இதுதான் எனக்கு இருக்கும் வருத்தம் .

இராஜாம்பாள்: அப்பா என்னை யாருக்குக் கல்யா ணம் செய்துகொடுக்க உங்களுக்கு இஷ்டம்?

சாமிநாத சாஸ்திரி: ராஜம்மா, கேட்கவேண்டுமா? கோபாலனைத் தவிர வேறே யாருக்காவது உன்னைக் கல்யாணம் செய்து கொடுக்க என் மனம் எப்படி ஒப்பும்? உங்கள் இருவருக்கும் குழந்தை முதலே இருக்கும் பிரியம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/64&oldid=677430" இலிருந்து மீள்விக்கப்பட்டது