பக்கம்:ராஜாம்பாள்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 இராஜாம்பாள்.

தோன்றுகிறது. பெண்கள் யாரை விரும்புகிறார்களே, அவர்களுக்கே கல்யாணஞ் செய்துகொடுக்க வேண்டுமென் றும், கல்யாணம் முதலிய விசேஷ காலங்களில் ஜாஸ் திப் பணம் செலவு செய்வது வியர்த்தமென்றும், தாதி கள் கச்சேரிகள் வைப்பது கூடவே கூடாதென்றும் இது வரையில் சொல்லிக்கொண் டிருந்த நீ, இந்தக் கிெ: கைக்கு நேர் விரோதமாக இப்போது நடக்க வேண்டு மென்று சொல்லுகிருயே! அது என்ன?

இராஜாம்பாள்: முன்னல் அப்படித் தோன்றிற்று. இப்போது அதெல்லாம் பைத்தியமென்றும் இப்படிச் செய்வதே சிலாக்கியமென்றும் தோன்றுகிறது. இது பிள்ளைகளில் கெடுதல்களாகத் தோன்றும் விஷயங்கு; பெரியவர்களான பிற்பாடு நன்மைகளாகத் தோன்றுகிற தில்லையா? ஒவ்வொருவரும் அநேக காரியங்கள் கெடு தல்களென்று தெரிந்தும் அவைகளைச் செய்கிறார்கள் அல் லவா? தீமையென்றால் எப்படிச் செய்வார்கள்? ஏதோ அதுகூலம் இருப்பதால்தான் அப்படிச் செய்கிரு.ர்கள். அதெல்லாம் எதற்கு? நீங்கள் வாக்குக் கொடுத்ததற் கும் உங்கள் அபிப்பிராயத்திற்கும் விரோதம் வராமல் நடக்கச் சித்தமாயிருக்கிறேன். இனி நீங்கள் இந்த விஷ் யத்தில் அசுவாரசியமாயிராமல் உடனே ராமண்ணுவைக் கூப்பிட்டு இச்சமாசாரம் சொல்லி அனுப்பிவிடுங்கள். இல்லாவிட்டால் நானே சொல்லி அனுப்புகிறேன்.

இப்படிச் சொல்லிவிட்டு இராஜாம்பாள் தன் வேலைக் காரிகளில் ஒருத்தியை அனுப்பி, ராமண்ணுவைக் கூட்டி வரச்சொல்லி அவரிடம் மேற்சொன்ன விஷயங்களை யெல்லாம் தெரிவித்து நீலமேக சாஸ்திரிகளிடம் போய்க் சொல்லும்படி அனுப்பினள்.

6. கல்யாண ஏற்பாடுகள்

ராமண்ணு: சாமிநாத சாஸ்திரிதான் சம்மதித்து விட்டார், இராஜாம்பாள் என்ன சொல்லுவாளோ என்று எஜமான் சந்தேகப்பட்டுக்கொண் டிருந்தீர்களே: பார்த்தீர்களா என் சாமர்த்தியத்தை மந்திரவாதி ஒரு வனைப் பிடித்து வேண்டிய ஏற்பாடுகளெல்லாம் செய்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/66&oldid=677432" இலிருந்து மீள்விக்கப்பட்டது