பக்கம்:ராஜாம்பாள்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

468 இராஜாம்பாள்

இப்படிச் சொல்லுவது சகஜந்தான். அதிருக்கட்டும்; மேல் நடக்கவேண்டிய காரியங்களைச் சொல்லுங்கள்.

நீலமேக சாஸ்திரி: இந்தக் கல்யாணத்தைப்போல் இதுவரையிலும் யாரும் நடத்தவில்லையென்று சொல்லும் படி அவ்வளவு சிறப்பாய்க் கல்யாணம் நடத்தவேண்டு மென்பது என் அபிப்பிராயம். உன் அபிப்பிராயம் எப்படியோ? -

இராஜாம்பாள்: என் அபிப்பிராயமும் அப்படித் தான். ஆனல் அதோடு நாம் கல்யாணஞ் செய்துகொள்வ. தற்கு முன்னுல் இந்த ஊரில் உள்ளவர்களை யெல்லாம் சந்தோஷப்படுத்திக் கல்யாணஞ் செய்தால் நல்லதென்று எனக்குத் தோற்றுகிறது. இந்த விஷயத்தில் தாங்கள் என் அபிப்பிராயத்தின்படி நடத்தவேண்டும்.

நீலமேக சாஸ்திரி: ஊரில் உள்ளவர்களை யெல்லாம் எப்படிச் சந்தோஷப்படுத்தவேண்டும்? சொல், அப்படியே செய்வோம்.

இராஜாம்பாள்: நமது கல்யாணத்திற்குப் பத்து நாள் முன் லிைருந்து இந்த ஊரிலுள்ள ஜனங்கள் எல்லாருக் கும் அவரவர்கள் ஜாதியாசாரத்திற்குத் தகுந்தபடி பூரி, அல்வா, வடை, பாயசம், லட்டு, ஜிலேபி முதலிய பல காரங்களுடன் பத்து நாளும் சாப்பாடு போடவேண்டும்; ஏழை ஒவ்வொருவருக்கும் மூன்று சேலை, மூன்று ஜதை வேஷ்டிகள் வீதம் வரப்பட்டவர்களெல்லோருக்கும் தரவேண்டும். கல்யாணத்திற்கு முதல்நாள் பெண்களுக்குச் சேலைகளும் ஆண்களுக்கு வேஷடிகளும் கொடுக்கவேண்டும். இதுதான் எனக்காகத் தாங்கள் செய்யவேண்டியது. தங்கள் கெளரதைக்குத் தக்க படிதான் கல்யாணஞ் செய்வீர்களே; அதைக் குறித்து நான் விஸ்தரிக்க வேண்டியதில்லை.

கொஞ்ச நேரத்திற்கப்பால் நீலமேக சாஸ்திரி இராஜாம் பாளிடம் விடைபெற்றுக்கொண்டு போய், இராஜாம்பாள் சொன்னபடியே ஏற்பாடுகள் செய்துவிட்டார். காஞ்சீ புரத் தில் எல்லா ஜாதியாருக்கும் பத்து நாளைக்குச் சாப்பாடு போடுகிறார்களென்றும், பத்தாம் நாள் ஒவ்வொரு பெண்ணுக்கும் மூன்று சேலைகளும், ஆணுக்கு மூன்று ஜதை வேஷ்டிகளும் இளும் அளிக்கப்போகிறார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/72&oldid=684614" இலிருந்து மீள்விக்கப்பட்டது