பக்கம்:ராஜாம்பாள்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்யாண ஏற்பாடுகள் 39.

களென்றும் சமாசாரம் பரவினவுடனே, லூர்களிலிருந்து ஜனங்கள் கூட்டங் கூட்டமாய் வந்து சேர்ந்தார்கள். காஞ்சீபுரத்தில் சாதாரணமாய் உட்

காரக்கூட இடம் அகப்படுவது கஷ்டமாகப் போயிற்று. முகூர்த்தம் தீர்மானஞ் செய்திருக்கும் நாள் வியாழக் கிழமையாதலால் புதன்கிழமையன்று புடைவைகளும் வேஷ்டிகளுங் கொடுக்கப்பட்டன. புதன்கிழமை ராத்திரி மாப்பிள்ளை புறப்பட்டுப் பெண் வீடு வர நாள் பார்த் திருந்தார்கள்.

காஞ்சீபுரம் பூராவும் பந்தல்கள் போடப்பட்டன. ஒவ்வொரு தெருவிலும் கொட்டகைப் பந்தல்கள் போட் டுக் கச்சேரிகள் நடந்துகொண்டிருந்தன. ஊர் முழுவதும் விளக்குகள் போடப்பட் டிருந்ததன்றியும் புதன்கிழமை சாயங்காலம் ஐந்துமணி முதல் தீவட்டிகளும் மத்தாப்பு களும் எரிந்துகொண்டே இருந்தன. ஆறு மணியானதும், யானையின்மேல் அம்பாரி வைத்து நீலமேக சாஸ்திரிகள், ஊர் முழுதும் பதினெட்டு வாத்தியங்கள் தாம் தாமென்று முழங்க, யானையின் மீதிலுள்ள அம்பாரி யில் ஏறி உட்கார்ந்தார். சாதாரணமாய்ப் பட்டனப் பிரவேசங்களில் தீவட்டி சுமக்கிறவர்களும், மத்தாப்புக் காரரும் பாணக்காரரும் வெடிபோடுகிறவனும் வாத்தி யக்காரரும் தாசிகளும் வெற்றிலே, புஷ்பம், சந்தனம் கொடுப்பவர்களும் பன்னிர் தெளிப்பவர்களும் மாப் பிள்ளையோடுகூடவே போவது வழக்கமல்லவா? ஆல்ை இந்தக் கல்யாணத்தில் அப்படிப்பட்ட ஏற்பாடுகள் செய்ய வில்லை. பத்து கஜ தூரத்திற்கொரு தரம் தீவட்டிக்காரர் ஐம்பது பேர், மத்தாப்புக்காரர் ஆறு பேர், பாணவேடிக் கைக்காரர் நான்கு பேர், வெடிவண்டி ஒன்று, ஒரு ஜதை மேளகாரர், ஒரு ஜதை பாண்டுவாத்தியக்காரர், நான்கு தாசிகள், பன்னிர் தெளிக்க இருவர், வெற்றிலை, புஷ்பம், சந்தனம் கொடுக்க நான்கு பேர் ஆகிய இவர்கள் நிறுத் தப்பட்டிருந்தார்கள். இப்படியே ஊர் பூராவும் நிறுத் தப்பட்டிருந்தமையால் ஒரு பக்கத்திலுள்ளவர்கள் இன் ைெரு பக்கம் போகவேண்டிய அவசியம் இல்லாமல் இருந் தது. ஆகவே பட்டணப் பிரவேசம் புறப்பட்டவர்கள் மாத்திரம் போய்க்கொண் டிருந்தார்களே தவிர வேறே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/73&oldid=684615" இலிருந்து மீள்விக்கப்பட்டது