பக்கம்:ராஜாம்பாள்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ ராஜாம்பாள்

நாற்பத்தெட்டு லட்ச ரூபாய் போன போக்கென்ன? நான்கு வருஷ காலத்தில் நாற்பத்தெட்டு லட்ச ரூபாய் செலவுசெய்த பிரபுவுக்கு இனி இந்த இரண்டு லட்ச ரூபாய் எவ்வளவு நாளைக்கு நிற்கப்போகிறதோ தெரிய வில்லை. இனி அவனுக்குக் குடிப்பதற்கும் வீண் ஜம்பங் கள் செய்வதற்கும் செலவுக்குப் பணந் தேவை. வேறு வழி இல்லாததால் நகைகளை விற்றுத்தானே செலவு செய்யவேண்டும்? மேலும் லட்சம், இரண்டு லட்ச மென்று நகைகளை வாங்கி வைத்திருப்பதால் என்ன பலன்? வட்டி முடக்கந்தானே? இரண்டு லட்ச ரூபாய்க் கும் நிலம் வாங்கிவிட்டால் திருடலுைம் அடிக்க முடி யாது. மாதம் குறைந்தது ஐந்நூறு ரூபாய் வருமானம் வரும். ஜீவிக்கச் சக்தியில்லாத ஏழை ஜனங்களுக்கு அதைப் உங்கிட்டுக் கொடுத்தால் அதனால் எவ்வளவு அநுகூல மென்று பார்த்தாயா? ஒரு குடும்பத்திற்குக் கால்வயிற் துக் கஞ்சிக்காகிலும் பத்து ரூபாய் வீதங் கொடுத்தால் ஐம்பது குடும்பங்கள் பிழைக்குமே! அதை விட்டு நீ இரண்டு லட்ச ரூபாய் பெறுமான நகைகள் போட்டுக் கொண்டிருப்பதால் வரும் பலன் என்ன? எந்தச் சமயத் தில் திருடர்கள் நமது வீட்டிற் புகுந்து நகைகளைத் திரு டிக்கொண்டு போய்விடுவார்களோ என்னும் பயத்தால் இராத்திரி முழுவதும் மொட்டுமொட்டென்று விழித்துக் கொண்டு காவல் இருக்கவேண்டியதுதான். பக்கத்தில் நாய் குலேத்துவிட்டால், திருடர்கள் வந்திருப்பார்கள் என்ற பயத்தால் வீட்டில் உள்ளவர்களே எல்லாம் எழுப்பு வேண்டும். அப்படி எழுப்புவதால் உன் துளக்கம் மாத்தி ரங் கெடுவதன்றி எல்லாருடைய தூக்கத்தையும் கெடுக் கத்தான் வேண்டிவரும். மேலும் ஒர் ஊர் விட்டு இன்ளுேர் ஊருக்குப் பிரயாணம் போனல் நகைகள் யார் போட்டுக்கொண் டிருக்கிறார்களோ அவர்களைத்தான் திருடன் பலமாய்ப் புடைப்பான். சில சமயங்களில் திருட வந்தவன் மானபங்கமும் செய்து போவதும் உண்டு.

கனகவல்லி: நகை போட்டுக்கொண் டிருந்தால் தான் திருட வருவான்போல் இருக்கிறது. இல்லாவிட்டால் திருட வரமாட்டானே? -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/8&oldid=677374" இலிருந்து மீள்விக்கப்பட்டது