பக்கம்:ராஜாம்பாள்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு கோரமான கொலே 81

நா ன் கா வது , இவ்வளவும் போதாதென்று சகோபாலன்’ என்பதில் முதல் எழுத்தாகிய கோ’ என்னும் எழுத்து முலேயில் எழுதப்பட்டு, ரத்தந் தோய்ந்து துண்டு துண்டாய்க் கிழிக்கப்பட்ட கைக் குட்டை கொலே நடந்த இடத்திலுள்ள சாம்பலில் மூடப் பட்டிருந்ததை உம் கையால் எடுத்துக் கொடுத்தீர்.

இவ்வளவு பரிஷ்காரமான சாட்சியங்களைப் பார்த்த பிற்பாடு கூட, செஷன்ஸ் ஜட்ஜும் ஜூரர்களும் கோபாலன் குற்றவாளி யல்லவென்று சொன்ன். அப்பால் நான் இந்த இன்ஸ்பெக்டர் உத்தியோகத்தித் விட்டுவிட்டுத் தோட்டி வேலைக்குப் போவேன்.

கோவிந்தன். தாங்கள் அவ்வளவு நிச்சயமாய்ச் சொல்லுவதும், தண்டிக்காவிட்டால் இந்த வேலையை விட்டுவிட்டுத் தோட்டிவேலேக்குப்போவேனென்று சொல் வதுஞ் சரியல்ல. எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக் குமோ யார் பார்த்தார்கள். ஆகையால் தயவுசெய்து இன்னுந் திர விசாரணை செய்து அப்பால் தங்கள் அபிப்பிரா யத்தை வெளியிடுங்கள். அவசரப்படுவது எப்போதுங் கெடுதி என்று எனக்குத் தோன்றுகிறது.

மணவாள நாயுடு: சரி; உங்களுக்குக் கோபாலன் குற்றவாளியல்ல என்று தோன்றுகிறதுபோல் இருக் கிறது. உங்களுடைய குட்ரயுக்திகளைக் கொண்டு நீங்கள் மாத்திரம் கோபாலனைத் தவிர வேறே யாராவது இக் கொலே செய்ததாக ரு.ஜூப்படுத்திவிட்டால், நான் தோட்டிவேலே செய்வதன்றி, ஒரு பக்கத்து மீசையையும் சிறைத்துவிட்டு, கரும் புள்ளி செம் புள்ளி முகமெல்லாங் குத்திக்கொண்டு கழுதைமேல் ஏறி ஊர்வலம் வரவுஞ் சம்மதிக்கிறேன். வேறொருவன் குற்றவாளியென்று நீர் ரு.ஜூப்படுத்தாவிட்டால் நான் செய்வதாகச் சொன்ன பிரகாரம் நீர் செய்வதாக ஒப்புக்கொள்கிறீரா?

கோவிந்தன்: என்ன! தங்களுக்கு இப்படிக் கோபம் வருகிறது? என் வாயால் தாங்கள் செய்தது சரியல்ல என்று சொன்னேன? திர விசாரித்துப் பிறகு சொல்வது நல்லதென்றேனே தவிர, வேறே ஏதாவது சொன்னேன: அப்படியிருக்கத் தாங்கள் பந்தயங் கூறுவது ஏன்?

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/85&oldid=684627" இலிருந்து மீள்விக்கப்பட்டது