பக்கம்:ராஜாம்பாள்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஸ்திரி புருஷ சம்பாஷணை 5

சாமிநாத சாஸ்திரி: அடி முட்டாளே! கேள், திருடர் கள் துப்பில்லாமல் சாதாரணமாய்த் திருட வரமாட்டார் கள். எவ்வளவு நகைகள் இருக்குமென்றும், ரொக்கம் எவ்வளவு அகப்படுமென்றும், வெள்ளிப் பாத்திரங்கள் எவ்வளவு இருக்குமென்றும் கணக்கு வைத்துக்கொண்டு தான் திருட வருவார்கள். நகை இல்லாத வீட்டில் திருடர் புகுவதே அதிக அபூர்வம். எவனே கஞ்சிக்கில்லாதவன் தான் அப்படிச் செய்வான். அப்போது யாராவது ஒரு குழந்தை எழுந்து யார் என்று அதட்டினுலும் அப்பேர்ப் பட்ட திருடன் இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடுவான். ஆளுல் நகைகள் ரூபாய்கள் முதலானவை அதிகமாயுள்ள இடங்களில் திருட வருகிறவன் அப்படிப் போகமாட்டான். சரியாய் நாற்பது அல்லது ஐம்பது ஆட்களேத் திரட்டிக் கொண்டு வந்து கதவைத் தட்டுவான். திறந்தால் ஆயிற்று: இல்லாவிட்டால் எப்படியாவது கதவைத் திறக்கும்படி செய்து, சொந்த வீட்டைப்போல் நுழைந்து அகப்பட் டதை எல்லாஞ் சுற்றிக்கொண்டு ரொக்கம் முதலானவை இருக்கும் இடத்தைச் சொல்லச்சொல்லி அடிப்பான். சொல்லாவிட்டால் பந்தத்தைக் கொளுத்திக்கொண்டு சுடுவான்.

கனகவல்லி சரி, அது எக்கேடாவது கெட்டுப்போகி றது; நீங்கள்தான் நகைகள் செய்து போடுவதில்லை என்று கங்கணங் கட்டிக்கொண் டிருக்கிறீர்கள். மாதம் மாதம் ஏன் ஏழைகளுக்கெல்லாம் ஐந்து பத்துக் கொடுக்கிறீர்கள்? அதல்ை வரும் நன்மை என்ன?

சாமிநாத சாஸ்திரி: நாம் ஐந்து பத்துக் கொடுப் பது நமக்கொரு பொருட்டல்ல. ஆனல் நம்மிடம் அதை வாங்கிக்கொண்டு போகிறவர்களுக்கோ அது பூராச் சாப்பாட்டைக் கொடுக்கிறது.

வாங்குங் கவளத் தொரு சிறிது வாய்தப்பின் தூங்குங் களிருே துயருரு-ஆங்கதுகொண் டுரும் எறும்பிங் கொருகோடி உய்யுமால் ஆருங் கிளையோ டயின்று.’ கனகவல்லி: ஏதோ தடதடவென்று பாசுரஞ் சொல்லிவிட்டீர்கள். அது என்னவென்றே எனக்குத் தெரியவில்லே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/9&oldid=677375" இலிருந்து மீள்விக்கப்பட்டது