பக்கம்:ராஜாம்பாள்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 இராஜாம்பாள்

வேண்டுமென்றுதான் நினைத்தேன். கட்டாயமாய் ஒன்று கூட ஒளிக்காமல் சொன்னுல்தான் தாங்கள் கொலைசெய்த வனைக் கண்டுபிடிப்பீர்களென்று சொல்வதால் ஒளியா மல் ஒவ்வொன்றுஞ் சொல்லிவிடுகிறேன். எப்படியா வது ராஜாம்பாளைக் கொலைசெய்த பாதகர்களைத் தாங்கள் கட்டாயமாய்க் கண்டுபிடிக்க வேண்டுகிறேன். கோவிந்தன்: சொல்வதாக ஒப்புக்கொள்ள இவ்வு ளவு நேரம் பிடித்தது. இனியாவது காலதாமதஞ் செய் யாமலும் ஒன்றையும் ஒளிக்காமலும் நடந்ததை நடந்த படி சொல்.

கோபாலன்: சாமிநாத சாஸ்திரிகளைத் திருட்டுக் கேசில் சேர்த்துப் போலீஸ் ஸ்டேஷனுக்குக் கொண்டு போன அன்றைய ராத்திரி, ராஜாம்பாள் என்னைக் கூப்பிடவிட்டு நடந்த விருத்தாந்தங்களைச் சொன்னுள், தான் விடிந்த பின் வேண்டிய ஏற்பாடுகள் செய்து கொள்வோமென்று சொல்லி அவளைப் பல வகையிற் சமாதானப்படுத்தியும் கேளாமல் விசனமாகவே பேசிக் கொண்டிருந்தாள். அதற்குள்ளாகச் சாமிநாத சாஸ்திரி கள் வந்து திருட்டுக் கேசுக்கும் தமக்கும் இனி யாதொரு சம்பந்தமும் கிடையாதென்று சொல்லவே நான் சந் தோஷமாய் வீட்டிற்குப் போய்விட்டேன். மறுநாள் காலையில் சுமார் பத்து மணிக்கு ராஜாம்பாளைப் பார்க் கப் போனேன். ராமண்ணுவோடு அதிக சந்தோஷமாய்ப் பேசிக்கொண் டிருந்த ராஜாம்பாள், என்னைப் பாரா மலே பராமுகமாயிருந்தாள். நான் அவளிடம் பேசலா மென்று சமீபத்திற் போனவுடனே கடுரப் பார்வையாய் என்னைப் பார்த்து நான் இதுவரையில் அவளேப் பாரா மல் இருந்திருந்தால் எப்படி நடந்துகொள்ளவேண்டுமோ அப்படியே அன்று முதல் நடந்துகொள்ள வேண்டு மென்று ராமண்ணு முன்னிலையிற் சொன்னுள். நான் அப்படிச் செய்த கொடுமை என்னவென்று கேட்டேன். அதெல்லாம் சொல்லவேண்டிய பிரமேயம் இல்லையென்று முன்னிலுங் கடுமையாய்ச் சொன்னுள். உடனே ஒன் றும் பேசாமல் வ்ந்துவிட்டேன். ராத்திரிப் பன்னிரண்டு மணிவரையில் என்னிடம் குரோத மில்லாமற் பேசினவள் இப்போது ராமண்ணு முன்னிலையில் இப்படிச் சொன்ன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/90&oldid=684632" இலிருந்து மீள்விக்கப்பட்டது