பக்கம்:ராஜாம்பாள்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 இராஜாம்பாள்

தென்று எண்ணிக்கொண்டு, இன்னும் பதினேந்து நாளேக்கு என் ஆசைக் கண்மணியிடம் பேசாமல் இருக்க வேண்டுமே என்ற விசனத்தால், கண்களிலிருந்து நீர் தாரை தாரையாய் வழிய வீடுபோய்ச் சேர்ந்தேன். அன்று ராத்திரி ஒன்றும் சாப்பிடாமல் விசனத்தோடு படுத்துக் கொண்டேன். இதற்குள்ளாக ராஜாம்பாள் நீலமேக சாஸ்திரியைக் கல்யாணஞ் செய்துகொள்ளப் போகிருளென்ற சமாசாரம் ஊரெங்கும் பரவியதால், அந்த விசனத்தால் நான் சாப்பிடாமற் படுத்துக் கொண் டேனென்று எண்ணிக் கொண்டு என் தாயாரும் தகப் பனரும் வேண்டிய தேறுதல்களைச் சொன்னர்கள். மறு நாள் காலையில் காலைப் போஜனம் அருந்திவிட்டு உட் கார்ந்திருக்கையில் ராமசுப்பு சாஸ்திரிகளின் குமாரத்தி லோகசுந்தரியின் வேலைக்காரி வந்து என்னை உடனே லோகசுந்தரி கையோடு அழைத்துக்கொண்டு வரச் சொன்னுளென்று சொன்னுள். நானும் உடனே புறப் பட்டுப் போனேன்.

கோவிங் தன் : கோபாலா, இவ்வளவு நேரம் நீ சொல்லிக்கொண்டு வந்த விஷயங்களை யெல்லாம் கவன மாய்க் கேட்டுக்கொண்டு வந்தேன். எனக்குச் சந்தேகமா யிருக்கப்பட்ட சமாசாரங்களை எல்லாம் நீ சொல்லி முடித்த பிற்பாடு நான் கேட்டுக்கொள்ளுகிறேன். ஆனல் சங்கோசப்படாமலும், ஒன்றையும் ஒளிக்காமலும், நீ போனபோது லோகசுந்தரி எங்கே இருந்தாளென்றும், எப்படி இருந்தாளென்றும், எந்த எந்த மாதிரி உடை உடுத்துக்கொண் டிருந்தாளென்றும், அவளும் நீயும் பேசிக் கொண்ட வார்த்தைகள் ஒன்றையாவது விடாமல் நன்றாய் ஞாபகப்படுத்திச் சொல்லவேண்டும். வேடிக்கைக்காக வாவது, அல்லது உன்னைப் பரீட்சை செய்யவேண்டு மென்றாவது நான் ஒவ்வோர் அற்ப விஷயத்தையுஞ் சொல்லச் சொல்லுகிறேனென்று எண்ணுமல் நீ முத வில் வாக்குக் கொடுத்தபடி சொல். -

கோபாலன் சொல்ல ஆரம்பித்தான்: நடந்த விஷயங் களே யெல்லாஞ் சொல்வது எனக்கு வெறுப்பைக் கொடுக்குமே தவிர வேறல்ல. இருந்தாலும் தாங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/94&oldid=684636" இலிருந்து மீள்விக்கப்பட்டது