பக்கம்:ராஜா ராணி.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

18 ஏனந்த மனிதன் வந்தானோ, இழவுச் சேதி சொல்வதற்கு?- என்னருமைப் பெண்பாவாய் கண்ணங் -- களங்கதே! களச் சேதி. கடைசிச் சேதி கேள் என்றான் அந்தோ! மாவிலைத் தோரணங்கட்டி. மணவிழா மேடைதன்னில் வாழ்விலே ஒன்றானோம் என்று சொன்ன கண்ணாளன் மார்பிலே வேல்தாங்கி நல்ல சாவிலே வீழ்ந்துவிட்டான்- ஆவிதான் போனபின்னும் உயிர்வாழும் ஆரணங்கு அச்சடித்த தமிழ்ப் பதுமை- கூவி அழுதாள் -கொத்தான மலர் இந்தன் குடும்பம்!- அதைக் கொத்தாமல் கொத்திவிட்ட கொடும்சாவைப் பழித்தான்-இழித் துரைத்தகள் "இனி என்ன மிச்சம்! கவி அழுகிப் போனதென்றும் கதறி அழுதாள் ! பனிவெல்லும் வழிகாட்டி, பனவெல்ல மொழி உரைத்து, பள்ளியறைக் கவிபாடும் நாளெல்லாம் மண்தானோ? இனி,இது,தூங்காத கண்தானோ? என அழுதாள்) அத்தான் பணம் கிடக்கும் களம் நோக்கித் தொழுதாள்! சோகத்தால் வீழ்ந்துவிட்ட அவள் காதில், வெற்றி வேகத்தால் பகைவர் தட்டும் போர் முரசம் பட்டதுதான் தாமதம்; கெட்டதுதான் கெட்டது நம்குடி-முழுவதுமே பட்டெடாழிந்து போகட்டும் என எழுந்தாள்! மட்டில்ரைப் புகர்கொண்ட நாட்டுக்கே அன்றி வீட்டுக்கோ வாழ்வேன் என்றாள்- வட்டி லிறக்காழியார்க்கும் விதங்கண்டதமிழ்நாட்டுமாதரசி, தொட்டிலே இட்டு, தான் வளர்த்த தூயசெல்வன் அட்டியின்றிக் கல்வி கற்க. ஆலமாத்தடி ஆசானிடம் சென்றீருக்கும் நினைவு கொண்டாள்! அங்கு சென்றாள் - அம்மா எளப் பாய்ந்தான், அழகுமிகும் மழலைமொழி அன்புத் தங்கம்! அப்பா. தாத்தா, ஊர் திரும்பினாரோ என்றான்| திரும்பிவந்து சாவூர் சென்றுவிட்டார்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜா_ராணி.pdf/17&oldid=1713718" இலிருந்து மீள்விக்கப்பட்டது