பக்கம்:ராஜா ராணி.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19

பாபு: 19 (மேடையில்) சபையோர்களே! இப்போது இந்த நாடகத்திற்கு தலைமை வகித்திருப்பவரும், சமாதானக் கமிட்டித் தலைவரும், எனது மைத்துனருமாகிய திரு சமரசம் அவர்கள் இந்த நாடகத் தைப் பற்றி இரண்டொரு வார்த்தைகள் பேசுவார்கள். (பாபு மாலை போடுகிறான்.) $ சம போடு: போடு! உம்- வேற யாரையாவது போட்டு இருக்கச் சொல்லலாம் மாலை நீயே போட்டுட்டே, பரவா யில்லை. அத்தானும் மச்சினனும்ன்னு பேசிக்கிவாங்க, (பேப் பரை எடுக்க, அது கீழே விழுந்து விடுகிறது.) சபையோர்களே! தாய்மார்களே ! ஆ! நீ வந்திருக்கிறாயா? என் பெண்ஜாதி தவிற! ஆங் இந்த சேரன். அதாவது சேரன் செங்குட்டுவன் நாடகத்தை நீங்க பார்த்தீங்க - அதிலே இருந்து தமிழர் வீரம் எவ்வளவு முன்காலத்திலே இருந்தது என்பது உங்களுக்குநாட கத்திவே இருந்து தெரிஞ்சி இருக்கும்--உம், அதாவது முன்னே ராஜாக்கள் சண்டை போடுவதுன்னா ரெண்டு படைகள் வரும்- அங்க கொஞ்சம் சாவான்-இங்க கொஞ்சம் சாவான். யாருக்கோ ஒருத்தனுக்கு வெற்றிகிடைக்கும். இந்தக் காலத் துலே சண்டை. சண்டையை ஏவி உட்டுட்டு. அதாவது ஏவி விட்டவன் அவன் அவன் பாட்டுக்க ஜாலியா போயிடுவான். ஒண்ணுமில்லாத ஜனங்கமேலே இந்த இந்த குண்டு குண்டு போட்டு, எல்லாத்தையும் சாக சாக, செத்து செத்து விடுவான் ஆ! ஒண்ணும் தெரியாத ஜனங்க செத்துவிடுவார்கள். ஆ.ஆ. வணக்கம். (சர்ந்தம் மேலே வருகிறாள்.) 10: என்னா? - சாந்: ஒண்ணுமில்லீங்க. அந்த சேரன் செங்குட்டுவன் போட்டாரே வேஷம் - அவரைக் கொஞ்சம் பாக்கணும். (நாடக வசூலை கொள்ளையடிக்க லெ ரௌடிகள் திட்ட மிட்டு டீயில் தூக்க மருந்தை கலந்து) ரௌ 2: இந்தம்மா, பாபுசார் இந்த டீயை கொடுத்துட்டு வரச் சொன்னார்! ராணி: தேங்க்ஸ். வச்சுட்டு போங்க, [ராணி டீயை குடிக்கிறாள்.) சமரசம்: இதுதான் மீஸ்டர் ராஜா! சாந்தம்: வணக்கம். சம ராஜா; இது என் மனைவி சாந்தம். வணக்கம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜா_ராணி.pdf/20&oldid=1713721" இலிருந்து மீள்விக்கப்பட்டது