பக்கம்:ராஜா ராணி.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

24 ராணி: ஆமாம்: ஆமாம்! ராஜா: ஆமாம், ஆமாம்! ஆங். ஏம்மா. இவ்வளவு பெரிய எடத்துப் பெண்ணாயிருந்தும் உங்க அப்பா அம்மா மனசு வருத்தப்படும்படியா நடந்துக்கலாமா? ராணி: உங்களுக்கு நான் யாருன்னு தெருயுமா? ராஜா : ஓ ! இதோ. இந்தப் பத்திரிகையிலே எல்லாம் போட்டிருக்கே. ஆமாம் லீலா! உங்கப்பா பேரையும். விலாசத்தையும் பத்திரிகையிலே போட்டா எல்லாருக்கும் யாருன்னு தெரிஞ்சுபோகும்; அதனால குடும்பத்துக்கு கெட்ட பேரு வருங்கிறதுக்காக ரொம்ப தந்திரமா நியூஸ்'-கொடுத் திருக்காரே! பெரிய சாமர்த்தியசாலிதான் உங்கப்பா! ராணி: (சமாளித்து) ஆமாம்! ராஜா; ஆமாம்! ஆ, காப்பி சாய்டிலே!... ராணி : (காப்பி சாப்பிட்டுவிட்டு) ரேன்! உம்:

அப்ப நான் வர் ராஜா : ஊஹூம்.. இரும்மா ! நில்லு...இந்தா நில்லு! உன்னைத் தனியா அனுப்ப மாட்டேன். உங்க வீட்டு வரைக்கும் வந்து உன்னை விட்டுட்டு வர்ரேன் ! ராணி: வேண்டாம். வேண்டாம்! வீட்ல ஏதாவது அனாவசியமா தப்பா நினைச்சுக்கு வாங்க! ராஜா : லீலா! நீ என்னை ஏமாத்தப் பாக்கிறே! நான் உன்கூட ស ១។ உங்க பங்களா வாசல்ல உன்னை இறக்கி வீட்டுட்டுதான் வருவேன்: யாரும் தப்பா நினைச்சுக்க மாட்டாங்க. என் ராணி: உம். உங்களுக்கு ஏன் வீண் சிரமம் 1 கோபந்தான் தெளிஞ்சு போச்சே! நானே போயிடுவேன் ! ராஜா: இருந்தாலும், பெரிய பணக்கார வீட்டுப் பொண்ணு.. நம்ப கார் இருக்கும்போது நடந்தா போறது! கொஞ்சம் இரு. இதோ வந்துட்டேன்! 411 (சமரசத்திடம் பாபு பணம் கேட்க சமரசம் பாபுவை ஏமாற்றுகிறார் தன்னிடம் பணம் இல்லையென்று.) வேலை: (சாந்தம்மானிடம்) அம்மா! அய்யா என்ன ஒரு மாதிரியா பயித்தியம் மாதிரி ஔர்ராரு? காலையிலியே ஏதா வது...உம் சாந்: ஹி...ஹி 1 அப்படி யெல்லாம் ஒண்ணுமில்லேடா! என்னா விஷயம்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜா_ராணி.pdf/25&oldid=1713726" இலிருந்து மீள்விக்கப்பட்டது