பக்கம்:ராஜா ராணி.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

28 கரண்ட்; சார் சார், இந்தம்மா நான் சொல்ல சொல்ல உள்ளே வந்துட்டாங்க சார்! ராஜா: கெடாவுட், ராஸ்கல்! டேய், ஒன்னைத் தாண்டா. யாரு என்னான்னு தெரியாம ஒளறிகிட்டு போடா; போயி காப்பி, சோடா, கிரஷ் எல்லாம் வாங்கிட்டு வாடா: மூஞ்சி யைப் பாரு... நீ ஒக்காரு லீலா, என்ன லீலா சௌக்கியமெல் லாம் எப்படி? வீட்ல் தகறாரு ஒன்றுமில்லையே? ஒங்க அப்பா, அம்மாவெல்லாம் உன் மேலே சந்தோஷப்பட்டாங்களா? ராணி: ஓ ராஜா: ஆமா. நீ எப்படி நம்ப கடையைக்கண்டு புடிச்சே? இனிமே எங்க உன்னைப் பார்க்கப் போறோம்னுல இருந்தேன். நான். அது சரிதான்... ம். பரவாயில்லை. என்ன. கல்யாணமெல் லாம் இப்போ எவ்வளவு தூரத்திலே இருக்கு? ராணி; அதான்... கல்யாணந்தான்... இப்ப பண்ணிக்கப் போறதில்லைன்னு சொல்லிட்டேனே! ராஜா. ஆமாம். ஆமாம். அதான் அன்னைக்கே பேப்பர்ல பாத்தேனே... ஆமா, கல்யாணம் பண்ணிக்காம... ..? ரா. எனக்கு ஏதாவது வேலை பார்க்கலாம்னு ஆசை ராஜா: அடே, இது என்னா இது! புதுசா இருக்கே! நீ வேலை பார்க்கிறதாவது... பேஷ் பேஷ்! பணக்கார வீட்டு புள் ளைங்க. வேலை பார்க்கணும்னு சொல்ற குரலை இப்பத்தான் என் ஆயுசிலே முதல் முறையா கேக்கிறேன்! ராணி: சோம்பேறித்தனமா வாழறது எனக்குப் பிடிக் கிறதே இல்லை. ஏதாவது கௌரவமான வேலை, ஏன் உங்க கம் பெனியில்கூட டைப்பிஸ்ட் வேலை காலியாயிருக்கு போலி ருக்கே...! ராஜா: ஆமாம்...அந்த வேலை...நீ, நீ, என்ன வீலா, வினை யாடுறே என் கம்பெனி ரொம்ப சின்னக் கம்பெனி; நீயோ பெரிய வீட்டுப் பெண்ணு; இந்த வேலை எல்லாம் ஒனக்கு சரிப்பட்டு வரும் ராணி: பரவ யில்லை, அதனால என்ன, பழகின எடமா இருக்கிறது நல்லதுதானே? ராஜா. அது சரிதான்...அது சரிதான் ராணி; அப்ப இன்னைக்கே வேலையை ஆரம்பிக்கிறேன். 'அப்பாய்ன்ட்மென்ட்' போடுங்க. ராஜா; அப்பாய்ன்ட்மென்ட்... நமக்குள்ள எதுக்கு இதெல்ல'ம்? நீ வேலையை ஆரம்பீ... அதெல்லாம் நானு (கதவு தட்டப்படுகிறது] எஸ் கமீன்...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜா_ராணி.pdf/29&oldid=1713800" இலிருந்து மீள்விக்கப்பட்டது