பக்கம்:ராஜா ராணி.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29

29 [கரண்ட் டீ கொண்டு வருகிறான்) சாப்புடு...டேய் கரண்ட்! என்னடா பாத்துக்கிட்டே நிக் கிறே? இன்னேல இருந்து நம்ப கம்பெனிக்கு இவங்கதான் 'டைப்பிஸ்ட்டு... தெரியுமா? கரண்டு: ஓ1 [ராணி ராஜாவின் வேஷப் போட்டோவைப் பார்ப்பது கண்டு] நீங்க என்னா பாக்குறீங்க? சேரன் செங் குட்டுவன் நாடகத்திலே அய்யாவோட போஸ் இது. ராணி: ஆ!...ஓ? கரண்ட் ஏங்க...அப்ப போர்டு...? ராஜா; கழட்டு போ! ராணி: நீங்க நடிகரா? வெளியிலே மாட்டியிருக்கிற ராஜர்: இல்லை,இல்லை. எங்கூட ஒரு அமைச்சூர்ஸ் 'குரூப்' இருக்கு. அவுங்க எப்பவாவது நாடகம் போடுவாங்க. என்னை யும் ஆக்ட் பண்ண சொல்வாங்க: பண்ணுவேன். அன்னைக்கி கூட ஒங்கிட்டே சொன்னேனே, ஒனக்குஞாபகம் இருக்காது... ஆ!... நடிப்பே தொழிலல்ல... ராணி: கலையிலே ஒரு ஆசை போலிருக்கு. ராஜா: ஆமாம்: ஆமாம்! இப்ப உனக்கு வேலை செய்ய னுங்கிற ஆசையில்லே. அது மாதிரி எனக்கு ஒரு ஆசை. [ராணி "வேலையில்லாத் தொல்லையில்லை" என்று பாடிக் கொண்டிருல்கிறாள்.) ஞானக்கண்: ராணி! ராணி...! ராணி: அப்பா! ஞான: ஏன்னம்மா. ஒரே கொண்டாட்டமா இருக்கே? ராணி: வேலையில்லாத் திண்டாட்டம் ஒழிந்து விட்ட தப்பார் ஞான: அப்படியா? உனக்கு வேலை கிடைச்சுட்டுதா? இந்த சந்தோஷமான செய்திக்கு நான் உனக்கு என்ன பரிசு கொடுக்கப்போகிறேன்! [ராணி தன் கையிலிருந்த மலரை அவரிடம் கொடுத்து...] ராணி: இந்தாங்கப்பா. இந்த ரோஜா மலரை நீங்களே என் தலையில்... ஞான: என்னா?... ராணி: ஹா, இல்லேப்பா! வேண்டாம்! நீங்க பார்த்து ஆனந்தப்பட முடியாத அலங்காரம் எனக்கு எதுக்கு அப்பா? [பூவை கீழே எறிந்து) உம். சாப்பிடுகிறீர்களாப்பா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜா_ராணி.pdf/30&oldid=1713801" இலிருந்து மீள்விக்கப்பட்டது