பக்கம்:ராஜா ராணி.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

42 பாபு: ரர்ஜாவையா? சொல்லலியே. ஏன்? சம; சொல்லலே?... பாபு; சொல்லலியே... சம: வந்துட்டானே...! பர்பு: எங்கே...? சம: இங்க வந்துட்டான்...! பாபு: எப்போ?... சம: மெத்தைலேயிருந்து ஓடிவந்தான் - நான் பாத்தேன்! பாயு: l... கண்ணால் சம்: பாத்தேன்! அவனை உடப்படாது.., அவனை புடிச்சி மச்சான் போச்சி: போச்சி... நீ போயி கொண்ணுபோடு! பாபு: அத்தான்.. சம்: கொண்ணு புடு | பாபு: அத்தான், பாத்துகிட்டே இருங்க... இன்னிக்கி முடிவுதான்! சம்: மச்சான் ... ஆ... சமாதானம். சமாதானத்தோடேயே கொல்லு. புடிச்சி கொண்டா எங்கிட்ட ஆ... பாவி. (சாந்தத்தின் அறைக்குப் போகிறார். அங்கு ரர்சர் வைத்து விட்டு ஓடிய ராணியின் பொட்டலத்தை எடுக்கிறார்.) சம்: இது என்னா? ஜாக்கெட்டு! புடவை!. நான் வாங்கிக் கொடுக்கலியே! எப்படி இது வந்தது? ஆ... ஆ, இது உம்... [சந்தேகத்துடன் பீரோவில் வைத்துவிட்டுப் போகிறார்.) (சாந்தம்மாள் 'முதியோர் காதல்' என்ற புத்தகத்தை பீரோவில் வைக்கச் சென்றவள், அங்கு புதிதாக இருக் கும் பொட்டலத்தை எடுக்கிறான்.) சாந் புடவை! இது கான் வாங்கலியே! ஓகோ, இவ் வளவு தூரத்துக்கு முத்திப்போச்சா? அமைதியா தான் ஆளை கையும் களவுமா புடிக்கணும்! [அதை எடுத்துக்கொண்டு போகிறாள்.) -*- இருந்து (ராஜா சமரசம் வீட்டிலிருந்து தப்பி வந்த விபரத்தை கரண்டிடம் கூறி அதற்கு மன்னிப்பு கேட்கப் போவதாக வும் கூறுகிறான்.) (ராஜா வருகிறான்.) சாந்தம்: அடடே தம்பீ! வாங்க, வாங்க! ராஜா: வணக்கம்! சாந்: முன்னாலேயே வர்ரேன்னு சொன்னிங்க] ராஜா: ஆமாங்க!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜா_ராணி.pdf/43&oldid=1713817" இலிருந்து மீள்விக்கப்பட்டது