பக்கம்:ராஜா ராணி.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

46 ராணி: உங்களுக்கு சகஜமா இருக்கலாம்; எனக்கு சங்கட மாயிருக்கு! கலாட்டாவுல ஒரு கல்லோ, கம்போ தலையில்பட் டிருந்தா என்னா ஆகிறது? நான் ராசா : என்னா ஆயிருக்கும்? கொஞ்சம் ரத்தம் வந்திருக் கும்/ அவ்வளவுதான் 1 லீலா ! இந்த ஓடம்பு எவ்வளவு தியா கத் தழும்புகளை ஏத்துகிட்டு இருக்கு தெரியுமா? இப்ப நம்ம நாடகத்திலே கலாட்டா நடக்குதேன்னு பாக்கிறியா? இதுக்கெல்லாம் ஒண்ணும் பயப்படமாட்டேன்; இதெல்லாம், பல தியாகத் தழும்புகளை ஏற்றுக் கொள்ளத் தயாராகத்தான் இருக்கவேண்டும்! கல் விழும்; கம்பு போடுவான்: காட்டாறு குறுக்கிடும். இதுக்கெல்லாம் கலங்கக்கூடாது லீலா! காதல் பாதைன்னா சாமான்யமா என்ன? ராணி: என்ன? என்ன? என்ன பாதை? ராசா: பாதை.... பாதை... கால் பாதை...ரோடு ராணி: என்னா ரோடு ? ராசா: ரோடு. ஈரோடு! ஈரோடு| ராணி: என்னா ஈரோடு? ராசா: இல்லை லீலா நீ ஈரத்தோட இருக்கிறியேன்னு சொல்லவந்தேன்! அது குளுவுருலே நாக்கு குழரி ஈரோடுன்னு வந்துடுச்சி | பரவாயில்லை... காஞ்சீ! காஞ்சீ...! ராணி: என்னா காஞ்சீ...? ராசா: தலை காஞ்சிடுங்கிறேன்... ஈரத்தோட இருக்கியே, லீலா, ஜூரங் கிரம் வந்துடப்போவுது.. நான் ஒரு பொடவை தர்ரேன் கட்டிக்கிறியா? ராணி: எங்கே யிருக்கு? ராசா: ஒனக்கு வேணும்னா என் வயத்தை கிழிச்சில்ல எடுப்பேன்... இந்தா! (வயிற்றிலிருந்து எடுத்துத் தருகிறான்) ராணி: ஓங்களுக்கு? ராசா : நான் ஒண்ணுதனே எடுத்துவச்சேன்! (ராணி உடைமாற்றிக் கொள்கிறாள்] ராசா: லீலா.. உம்.. வா, வா! குளிரு அடிக்குதுல்ல? ராணி: ஆமாம்! ரர்சா : ஒனக்கும் குளிரு அடிக்குதுல்ல.... ராணி: ஆ... மா.. ம்! ராசா: எனக்கும் குளிரு அடிக்குது! (அங்குள்ள ஒரு சிலையைக் கண்ட ராணி திடுக்கிட்டு) ராணி: ஆ!... ராசா: பயப்படாதே! பயப்படாதே! ராணி: என்னா இது? ராசா : இது... அதான், இந்த இது. அடடே இந்த இதுல்ல து வாயில் இருக்கு வரமாட்டேங்குது....

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜா_ராணி.pdf/47&oldid=1713828" இலிருந்து மீள்விக்கப்பட்டது