பக்கம்:ராஜா ராணி.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

48 யிலே போட்டுட்டு வந்துட்டேன்! ராணி: ஆமா ஆமா அந்த அம்மா ஏங்கிட்ட கொடுத் தாங்க! ராசா: நான் கொடுத்ததா சொல்லி கொடுத்திருப்பாங் களே! நான் குடுத்ததா சொல்லி குடுத்திருப்பாங்க... ராணி: ஆமா,சரி! போகலாம். குளிரும் கொஞ்சம் குறைந் திருப்பதாகத் தெரிகிறது? ராசா: ஆமாம், குளிரு குறையத்தான் செய்யும். ஏன்னா வார்த்தையிலே சூடேறுதுல்ல... ராணி:ம்,போகலாம். ராசா; இரு லீலா... கொஞ்சம் பேசிட்டு போகலாம். ராணி: இந்தா பாருங்க. இதெல்லாம் நல்லாயில்லே, நீங்க இப்படி எல்லாம் நடந்துகிட்டா அப்புறம் நான் வேலைக்குக் கூட வரமுடியாது. ஆமாம். எங்களீட்ல அனுப்பமாட்டாங்க... ராசா: அய்யய்யோ. வேலைக்கு வரமாட்டியா? ஃட்ல் அனுப்ப மாட்டாங்களா? அப்ப இன்னைக்கு இதுவரைக் ரும் போதும்.. போகலாம். மெள்ள, மெள்ள. பாத்து, பாத்து, (பாபு ராணியின் வீட்டில் ஏற முயற்சிக்கிறான்) உங்க ரரசா: டேய் நில்லு. அங்கே யாரு பாபுவர்? ஏன் பாபு ஒன் நிலமை இப்படி யாச்சு. எதுக்காக இந்த ளிட்டுமேலே இப்ப ஏறுனே? பாபு: நிறுத்து. வீட்டு மேலே ஏர்றது-- செவுறு ஏறி குதிக்கிறது -- அதல்லாம் ஒன் பழக்கம். ராசர். ந் என்ன சொல்றே? பாபு: அன்னைக்கு ராத்திரி ஏன் திருட்டுத்தனமா எங்க வீட்டுல நுழைஞ்ச? ராசா, அதுவா? அது நாயி ... பாபு: யார்ரா நாய். (அடிக்கிறான்) ராசா பாபு.... பாபு: என்னபாபு. பாபுவாம்ல பாபு ... பெரிய யோக்யன் ராசா: பாபு இப்பநான் ஓங்கிட்டே என்னா கேட்டேன்.. (இருவருக்கும் சண்டை--அதைராணி பார்த்துவிடுகிறாள்) ஞானக்கண்; என்னம்மா அது? ராணி; ஒண்ணுமில்லேப்பா. யாரோ ரெண்டுபேரு தெரு விலே சண்டை போட்டுகிட்டு இருக்காங்க. ஞான: அதெல்லாம் சகஜந்தாம்மா. யாராவது போக் கிரிங்க குடிக்கத்தெரியாம குடுச்சிபிட்டு உருளுவாங்க,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜா_ராணி.pdf/49&oldid=1713831" இலிருந்து மீள்விக்கப்பட்டது