பக்கம்:ராஜா ராணி.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

பாட்டு: 5. தாண்டவன் பாடல். வேலையில்லாத தொல்லை காலை பனி போலே நீங்கி போனதே... நான் எண்ணாத நல் வாழ்வுதான் தன்னால் வந்து சேர்ந்ததே. இன்ப நன்னாளிதே செல்வ பொன்னாளிதே... ஆஹா ஆனந்தம் ஆனந்தமே... முன்பின் அறியாதார் உறவால் என் மனம் போலவே நலமே நானடைந்தேன் அன்பின் உருவாகவே எந்தன் துயர் நீங்கவே நன்மை தந்திட வந்தார் இன்றே என்னை சீமாட்டி என்றெண்ணி ஏமாந்தாரே ஆஹா விந்தையிதே... பாட்டு: 6 விருத்தம் ஆழிசூழ் உலசும் விடிந்த தென்று-என் ஆருயிர் மணவாளரை எழுப்பிவிட்டு கோழிபோல் கொக்கரித்து என் கற்பையும் கொத்திவிட்டாய் கொடியவனே! படுபாவி! ஊழிபோல் வந்திங்கு ஆடிவிட்டாய் உடைந்த தாழிபோல் ஆகிவிட்டேன்-இனி ஒரு கணம் இந்த உயிர் நில்லுமோ கற்புக்கு இலக்கணம் சொல்லுமோ சொல்லுமோ.., எந்தன் உயிர் நில்லுமோ பாட்டு: 7. மணிப்புறா...புது மணிப் புறா!...புத்தப் புது மணிப் புறா...நானே தான் மேவிடும் அன்பால் தாவிடும் உன்பால் நெஞ்சம் பூ விரித்து அழைக்குது மஞ்சம் (மணி) பூமானே வாராய் கொஞ்சம் (tobxoft) ரோஜாக் கொல்லை முல்லைத் தோட்டம் தருவேன் சுகந்தானே! (மணி) எந்தன் முகந்தானே ராஜா உமக்கு நான் தான் ராணி பாட்டு: 8. வீலா?... லாலீ!... அது போலீ ! ... கண்ணற்ற தகப்பனுக்கு பெண்ணாகப் பிறந்தவளே! எண்ணற்ற பொய் சொல்லி என்னையே மாற்றிய என் தங்கமே! பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோசும் இருண்டு போகுமோ? மியாவ் மியாவ் வானை நோக்கித் திரையைப் போட்டால் வட்ட நிலாவும் மறைந்து போகுமோ (கண்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜா_ராணி.pdf/7&oldid=1713708" இலிருந்து மீள்விக்கப்பட்டது